பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை கட்டாயம் செயல்படுத்துக! பசுமைத் தீர்ப்பாயம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை கட்டாயம் செயல்படுத்துக! பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

சென்னை, ஆக.5 சென்னையைச் சேர்ந்த ஆண்டெனி கிளமெண்ட் ரூபின் என்பவர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண் டல அமர்வில் கடந்த 2020இ-ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப் படும் 14 வகையான பிளாஸ் டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் அர சாணை பிறப்பிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆ-ம் தேதி இது அமலுக்கு வந்தது.

ஆனால், இதை செயல் படுத்த, தொடர்புடைய அர சுத் துறைகள் ஆக்கப்பூர்வ மான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சந்தைகளில் சில வகையான பிளாஸ்டிக் பொருட்கள் இப்போதும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. எனவே, பிளாஸ்டிக் தடை அரசா ணையை முறையாக அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனு வில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான தீர்ப்பை, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் (2.8.2022) வழங்கினர். 

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016-இல் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி களை சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கட் டாயம் செல்படுத்த வேண் டும். குறிப்பாக, பிளாஸ்டிக் மூலமாக நுகர்வுப் பொருட் களை விற்பனை செய்வோ ருக்கு, பிளாஸ்டிக் மேலாண் மையில் உள்ள பொறுப்பு குறித்த வழிகாட்டுதல்களை யும் செயல்படுத்த வேண்டும்.

விதிமீறல்கள் இருந்தால், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்கவேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப் படும் பிளாஸ்டிக்பொருட் கள் மீதான தடை செயல் படுத்தப்படுவதை சுற்றுச் சூழல்மற்றும்வனத் துறைச் செயலர் கண்காணிக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சி யர்கள், உள்ளாட்சி அமைப் புகள் ஆகியோருடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை, அவற் றுக்கான மாற்றுப் பொருட் கள் தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.

அதேபோல, கல்வித் துறை, மாநில சட்டப் பணி கள் ஆணையம் ஆகியவற் றுடன் இணைந்து, பிளாஸ் டிக் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ் வாறு தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment