திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை வழங்கவேண்டும் : உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை வழங்கவேண்டும் : உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஆக.8 கருக் கலைப்புச் சட்டத்தின் கீழ் திரு மணமாகாத பெண்ணுக்கும் உரிமை வழங்க வேண்டும் - என்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந் துள்ளார். அவர் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்து விட் டனர். கருவை கலைக்க உயர் நீதிமன்றமும் அனுமதி மறுத்து விட்டது.

இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திர சூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது, திருமணமாகாத பெண் ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங் கினர்.

இதுதொடர்பாக  நீதிபதிகள் கூறும்போது, 

“ஒரு பெண்ணின் இனப் பெருக்கத் தேர்வு உரிமை என் பது அரசமைப்பு சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட உரிமையாகும். விவாகரத்து பெற்றவர்கள், கண வனை இழந்தவர்கள் மற்றும் திருமண மாகாத பெண்களும் தங்கள் 24 வார கருவைக் கலைக்க அனும திக்கும் விதத் தில் சட்டம் உருவாக்க வேண் டும்’’ என்று உத்தர விட்டனர்.


No comments:

Post a Comment