பிரதமர் மோடி - வருண்காந்தி எம்.பி. மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

பிரதமர் மோடி - வருண்காந்தி எம்.பி. மோதல்

புதுடெல்லி, ஆக.7 ஓட்டுகளை அள்ளு வதற்காக அரசியல் கட் சிகள் தேர்தலின்போது இலவசங்களை தரு வதாக கூறுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் சாடினார். இதற்கு பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் வருண் காந்தி பதிலடி தந்துள்ளார். 

அவர் டுவிட்டரில் இந்தியில் நேற்று (6.8.2022) வெளியிட்ட பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்கள் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அத் துடன் வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவ னங்கள் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டதை அவர் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனங்களில் இரண்டில் மெகுல்சோக்சி, ரிஷி அகர்வால் உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி வருண் காந்தி குறிப்பிடுகையில், " ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கி விட்டு நாடாளுமன்றம் நன்றியை எதிர்பார்க் கிறது. ஆனால் 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர் களுக்கு வழங்கிய ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக அதே நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அரசின் கஜானாவில் முதல் உரிமை யாருக்கு? "என கேள்வி எழுப்பி உள்ளார்.


No comments:

Post a Comment