மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

2022-2023 கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த கல்விப்பிரிவுகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்  கடைசி தேதியை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துளளது.

மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் பட்டப்படிப்பு களில், பி.பார்ம் (லேட்டரல் என்ட்ரி), பி.எஸ்.சி செவிலியர் (போஸ்ட் பேசிக்), மனநல மருத்துவம் பட்ட யபடிப்பு (போஸ்ட் பேசிக்), செவிலியர் பட்டயப்படிப்பு (பெண்களுக்கு), மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் பட்டயபடிப்புகளில் சேர கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத் துவக் கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்துள்ளது . இந்த படிப்புகளில் 2536 இடங்கள் உள்ளன.

2022-2023 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை படிவங்கள்  tnmedicalselection.org  மற்றும்.tnhealth.tn.gov. in  என்ற இணையதளங்களில் பெறலாம்.  இந்த விண்ணப்பங்கள் 12ஆம் தேதி வரை மட்டுமே ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,

தற்போது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree courses) B.PHARM, B.P.T., B.ASLP, B.Sc. (NURSING), B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY   உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண் ணப்பித்தார்கள், இந்திய குடிமகனாகவும், தமிழ்நாட் டைப் பிறப்பிடமாக கொண்டவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள் மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் (PARA MEDICAL CERTIFICATE DIPLOMA COURSES) DIPLOMA IN PHARMACY, DIPLOMA IN OPTOMETRY  உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

அதேபோன்று, தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் உள்ள செவிலியர் பட்டயப் படிப்பில் 2060 இடங்கள் உள்ளன. இந்திய குடி மகனாகவும், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண் விண்ணப்பபதாரர்கள் இந்த பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment