பெரியார் மணியம்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி உலக அளவிலான சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

பெரியார் மணியம்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி உலக அளவிலான சாதனை

வல்லம், ஆக. 8- பெரியார் மணியம்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக முதுகலை இரண் டாமாண்டு வணிகவியல் துறை  மாணவி வி.விமலா  உலக அளவிலான இளை ஞர் விளையாட்டு ஊக் குவிப்பு சங்கம்  (Youth Sports Promotional Association)  தடகள விளை யாட்டு போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத் தில் இரண்டாம் இடம் பெற்று பல்கலைக்கழகத் திற்கு பெருமை சேர்த் தார், இந்த போட்டியினை இந்திய இளைஞர் விளையாட்டு ஊக்குவிப்பு  தடகள சங்கம்  (YSPA) 1 ஆகஸ்ட் முதல்  4 ஆகஸ்ட் வரை ரங்கசாளா விளை யாட்டு மைதானம், நேபா ளில் நடைபெற்றது. 

வெற்றி பெற்ற மாண வியை   பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணைவேந்தர் பதிவாளர் பேராசிரியர் கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பாராட்டி னார்கள்.


No comments:

Post a Comment