தமிழ்நாடு கற்றிடமாக இருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொன்னதைப்போல, வெற்றிடமாக ஒருபோதும் திகழவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

தமிழ்நாடு கற்றிடமாக இருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொன்னதைப்போல, வெற்றிடமாக ஒருபோதும் திகழவில்லை

ஜனநாயகப் பாதுகாப்பிற்கும் 'திராவிட மாடல்' ஆட்சிதான் கலங்கரை விளக்கம்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஆக.7 தமிழ்நாடு கற்றிடமாக இருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொன்னதைப்போல, வெற்றிடமாக ஒருபோதும் திகழவில்லை; ஜனநாயகப் பாதுகாப்பிற்கும் திராவிட மாடல் ஆட்சிதான் கலங்கரை வெளிச்சமாக இருக்கப் போகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். . 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2022) சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தந்தை பெரியார் அவர்களுடைய 

குருகுலத்தில் பயின்றவர்

‘மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று தம்மை ஒரு வரியில் விமர்சனம் செய்துகொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் - தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்தில் படித்ததன் பயனாக.

'திராவிட மாடல்' 

ஆட்சிக்கு முன்னோட்டம்!

அவர் அமைத்த ஆட்சி முழுக்க முழுக்க ‘திராவிட மாடல்' என்ற இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய முன் னோட்டமாக அமைந்தது மட்டுமல்லாமல், ‘திராவிட மாடலுடைய' ஆட்சி நூறாண்டுக்கு முன்னால், திராவிட ஆட்சி - நீதிக்கட்சி ஆட்சியாக மலர்ந்த காலத்திலிருந்து, அண்ணா அதன் தொடர்ச்சி என்றார். அண்ணாவின் ஆட்சி, அதனுடைய தொடர்ச்சிதான் என்னுடைய ஆட்சி என்று கலைஞர் சொன்னார். கலைஞருடைய ஆட்சி, திராவிடர் ஆட்சி, ‘திராவிட மாடலாக' இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே இப்பொழுது தேவைப்படுகின்ற ஒன்றாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. காரணம், ஜனநாயகம் கேள்விக் குறியாக ஆக்கப்பட்டு இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படக் கூடிய அளவிற்கு, நாடாளுமன்ற ஜனநாயகம் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில், கலைஞர் அவர்கள் எப்படி மிகப்பெரிய எதிர்நீச்சல் போட்டார்களோ, அதுபோல, அனைவரையும் அணைத்து, அனைவருக்கும் அனைத்தும் தந்து, புதியதோர் திருப்பத்தை ஏற்படுத் துவதற்கு கலைஞருடைய உழைப்பு, அவர் வகுத்த வியூகம் இவை அத்தனையும் இன்றைய முதலமைச்சர் அவர்கள் தெளிவாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

வழிகாட்டும் நெறியாக அமையட்டும்!

எனவேதான், தமிழ்நாடு கற்றிடமாக இருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொன்னதைப்போல, வெற்றிடமாக ஒருபோதும் திகழவில்லை என்று காட்டக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

எனவேதான், தமிழ்நாடு, பெரியார் மண், சமூகநீதி மண்ணாக மலர்ந்தது மட்டுமல்ல; ஜனநாயகப் பாதுகாப்பிற்கும் இதுதான் கலங்கரை வெளிச்சமாக இருக்கப் போகிறது என்பதற்கு இந்தச் சூளுரையே நமக்கு மிக முக்கியமான வழிகாட்டும் நெறியாக அமையட்டும்.

கலைஞர் மறையவில்லை; 

வாழ்ந்து கொண்டிருக்கின்றார்

கலைஞர் மறையவில்லை; வாழ்ந்து கொண்டிருக் கின்றார் - கொள்கை ரீதியாக! அதன்மூலம்தான் ஜன நாயகத்தை வாழ வைக்க முடியும்; அதன்மூலம்தான் சுயமரியாதையை, பகுத்தறிவை, சமூகநீதியைக் காக்க முடியும் என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மை.

எனவே, அந்த சூளுரையை அவருடைய நினைவு நாளான இன்று புதுப்பிப்போம்!

வாழ்க கலைஞர்!

வளர்க திராவிடம்!

வெல்க நம்முடைய மாநில உரிமைகள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நினைவிடத்தில் கழகத் தலைவர் 

மலர் வளையம் வைத்து மரியாதை

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று அவ ரது நினைவிடத்தில் கழகத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்தமிழ் அறிஞர் மான மிகு கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2022) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலை அறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்தும், அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப் புச் செயலாளர் வீ.பன்னீர்செல் வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், நெய்வேலி வெ.ஞானசேகரன், சிவகங்கை மண்டல தலைவர் இராமேசு வரம் சிகாமணி, மாநில ப.க. துணைச் செயலாளர் தரும.வீரமணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், பூவை செல்வி, செ.பெ.தொண்டறம், த.மரகதமணி, தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.இராகவன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சண்முகப் பிரியன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந் திரன், திராவிட தொழிலாள ரணி பாலு, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செய லாளர் கோ.நாத்திகன், குணசேகரன், கதிர்வேல், சந்திர சேகரன், வழக்குரைஞர் உத்திர குமார், பாலகிருட்டிணன், வட சென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை அ.அன்புச்செல்வன், செம்பியம் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், சி.காமராஜ், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நா. பார்த் திபன், துணைச் செயலாளர் அரவிந்த் குமார் அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவன், துணைச் செயலாளர் திராவிட வித்து, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், க.கலைமணி, வை.கலையரசன்,  பிரவீன் குமார், பூவரசன், அன்பரசன், மகேஷ், அசோக்குமார், கமலேஷ் குமார், இராமண்ணா, ஆவடி கார்த்திகேயன், வேலுச்சாமி, விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், வேலூர் பாண்டு, பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஜனார்த்தனம், செல்லப்பன், ஆகியோர் இந்நிகழ்வில் பங் கேற்றனர்.


No comments:

Post a Comment