பீகாரில் பி.ஜே.பி. வெளியேற்றம்: புதிய அமைச்சரவை உருவாக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பீகாரில் பி.ஜே.பி. வெளியேற்றம்: புதிய அமைச்சரவை உருவாக்கம்!

பாட்னா, ஆக.11- பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் சார்பில் 8 ஆவது முறையாக பீகார் முதலமைச் சராக நிதிஷ் குமார் நேற்று (10.8.2022) பதவியேற்றார். லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்த லில் அய்க்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களை பெற்ற அய்க்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 21 மாதங்கள் ஆட்சிக்குப் பிறகு பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் நேற்று முன்தினம் (9.8.2022) முறித்தார். அன்றைய தினமே முதலமைச்சர் பதவியிலி ருந்து விலகி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஅய் (எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். அடுத்த சில மணி நேரத்தில் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நேற்று (10.8.2022) நடந்த விழாவில் 8 ஆவது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி யேற்றார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத் தார். லாலுவின் மகன் தேஜஸ், துணை முதலமைச்சராகப் பதவி யேற்றுக் கொண்டார். 

உடல்நலக் குறைவால் டில்லியில் சிகிச்சை பெற்று வரும் லாலு பதவி யேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவரது மனைவி ரப்ரி தேவி, மூத்த மகன் தேஜ் பிரதாப் மற்றும் ராஷ் டிரிய ஜனதா தள மூத்த தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பதவியேற்புக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் நிதிஷ்குமார் கூறும் போது,

2024 தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது

“பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நபர், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுகிறது” என்றார்.

துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “மாநில கட்சிகளை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் சரியான முடிவு எடுத்துள்ளார். புதிய ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த ஒரு மாதத்தில் இளைஞர் களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

அமைச்சரவை விரிவாக்கம்

முதலமைச்சர் நிதிஷ் குமார் தலை மையிலான புதிய கூட்டணி அரசில் அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஅய் (எம்.எல்.) உட்பட 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைச்சர் பதவி களை வழங்க முடிவு செய்யப்பட்டி ருக்கிறது. இதன் அடிப்படையில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 20, அய்க்கிய ஜனதா தளத்துக்கு 13, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய் யப்படும் என்று ஆளும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 சட்டமன்ற உறுப்பினர் களின் ஆதரவு தேவை. நிதிஷ் அரசுக்கு 164 சட்டமன்ற உறுப்பினர் களின் ஆதரவு இருப்பதால் நம் பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment