பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குற்றவியல் (திருத்த) சட்டம், 2013 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குற்றவியல் (திருத்த) சட்டம், 2013

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காக, நீதிபதி வெர்மா கமிட்டியால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப, குற்றவியல் (திருத்த) சட்டம் 2013 வாயிலாக, இந்தியத் தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, மற்றும் இந்திய சாட்சிய சட்டம், 1872 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

* ஆசிட் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், பார்வை பாலியல் துன்புறுத்தல், ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைதல் மற்றும் பின் தொடர்தல் போன்ற புதிய குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.

* பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், ஆசிட் தாக்குதல்கள், வார்த்தை கள் மற்றும் முறையற்ற வகையில் தொடுதல், அநாகரிகமான சைகை செய்தல்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

* பாலியல் பலாத்காரம் என்பதற்கான வரைய றையில், வாய்வழி பாலுறவு, புணர்ச்சியற்ற பாலுற வும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

* கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில், ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயுதப்படை யைச் சேர்ந்த உறுப்பினரால் செய்யப்படும் பாலியல் பாலத்காரமும், வகுப்புவாத அல்லது இனவாத வன்முறையின் போது அல்லது சம்மதம் தெரிவிக்க இயலாத நிலையில் உள்ள ஒரு பெண்ணின் மீது செய்யப்படும் பாலியல் பாலத் காரமும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

* கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் உணர்வற்ற நிலைக்கு செல்லும் வகையிலான பலாத்காரம் ஆகியவற்றுக்கான தண்டனைகள், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

* அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆசிட் தாக்குதல் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதும், உடனடியாக அந்த நிகழ்வைப் பற்றி காவல் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டது.

* சுரண்டல் - உடல்ரீதியான சுரண்டல் அல்லது எந்தவொரு வடிவிலான பாலியல்ரீதியான சுரண்டல், அடிமைத்தனம், கொத்தடிமை, அல்லது கட்டாயப்படுத்தி உடலுறுப்புகளை எடுத்தல் ஆகியவற்றுக்காக குழந்தைகள் கடத்தப்படுதல் உள்ளிட்ட ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்.

வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், 2005

2005 ஆம் ஆண்டு, வீடு வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், 2005 இயற்றப்பட்டது. இந்த சட்டமானது’ வீட்டு வன்முறை’யை, உடல் ரீதியான வன்முறை மட்டுமல்லாமல், கூடவே உணர்வு ரீதியாக/சொற்கள் சார்ந்த, பாலியல் ரீதியாக, மற்றும் பொருளாதார ரீதியான வன்கொடுமையையும் உள்ளடக்கியது என வரையறையளிக்கிறது. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாது காப்பு ஆணைகள் உள்ளிட்ட சேவைகளையும், ஆதரவையும் இந்த சட்டம் வழங்குகிறது.

* கணவர் அல்லது ஆண் லிவ்-இன் துணைவர் அல்லது அவருடைய உறவினர்களால் செய்யப் படும் வீட்டு வன்முறையிலிருந்து மனைவிக்கு, அல்லது பெண் லிவ்-இன் துணைவிக்குப் பாதுகாப்பு வழங்குகிறது, மேலும் இந்த சட்டம் தன்னுடைய பாதுகாப்பை, சகோதரிகள், வித வைகள் அல்லது தாய்மார்கள் போன்ற வீட்டில் வசிக்கும் மற்ற பெண்களுக்கும் விரிவுபடுத்தி யுள்ளது.

* ‘வீட்டு வன்முறை’ என்பதற்கான வரை யறையில், எந்த வித வரதட்சணை அல்லது மற்ற சொத்துக்கள் அல்லது ஆஸ்திகளை கோருகின்ற சட்ட விரோதக் கோரிக்கைக்காக செய்யப்படுகின்ற உடல் ரீதியான, பாலியல் ரீதியான, சொற்கள் ரீதியான, உணர்வுரீதியான அல்லது பொருளாதார ரீதியான துன்புறுத்தலும், அதற்கான மிரட்டலும் இந்த வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

* ஒரு பங்கிடப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமை உள்ளது, அது பாதிக்கப்பட்ட நபருக்கும் எதிராளிக்கும் சேர்ந்து சொந்தமான வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ, அல்லது தனியே சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம், ஆனால் இது சம்பந்தமாக உரிமை, அல்லது சமபங்கு அல்லது கூட்டு குடும்பத்தின் வீடு, அதில் எதிராளி உறுப்பினராக இருக்கிறார், பாதிக்கப்பட்ட நபர் அல்லது எதிராளிக்கு ஒரு உரிமையும் இல்லாதவாறு இருக்கின்ற வீடாக இருக்க வேண்டும்.

* பகிரப்பட்ட வீட்டிலிருந்து எதிராளி வெளி யேற்றப்படுவதற்கோ அல்லது மாற்று தங்குமி டத்தைப் பெறுவதற்கோ அல்லது அதற்கான வாடகை செலுத்துவதற்கோ வழி காட்டப்படும்.

* இந்த சட்டத்தின் கீழ், பாதுகாப்பு ஆணைகள், குடியிருப்பு ஆணைகள், பண நிவாரணம், காவல் ஆணைகள் மற்றும் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமையுண்டு.

* வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை நடத்துவதற்கும், நேர்மறையான அணுகுமுறையுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதற்கும், மாநில அரசால் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சட்டமானது, பாதிக்கப்பட்டவரின் மருத்துவப் பரிசோதனை, சட்டரீதியான உதவி யைப் பெறுதல், பாதுகாப்பான தங்குமிடம் ஆகிய விஷயங்களில் அவருக்கு உதவியளிப்பதற்காக, சேவை வழங்குநர்களாக செயல்படுவதற்கான அங்கீகாரத்தை அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வழங்குகிறது.

No comments:

Post a Comment