பட்டுக்கோட்டை மாவட்டத்தில் 21-07-2022 அன்று மன்னார்குடி மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவில்வெண்ணி வழக்குரைஞர் முத்துவேல், கோவில்வெண்ணி சுதாகர், தமிழ்தேசிய பாதுகாப்புக்கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சந்திரசேகரன், மேனாள் ஒன்றியக் குழு உறுப்பினர் அய்யம்பேட்டை பழனி, ஒன்றியக்குழு உறுப்பினர் அய்யம்பேட்டை தெ.நடனசிகாமணி ஆகியோர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். முன்னாவல்கோட்டை திருஞானம் விடுதலை சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
பட்டுக்கோட்டை மாவட்டத்தில் 20-07-2022 அன்று பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகர் தலைமையில் கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் காளிதாசன், பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லத்தம்பி, மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசாமி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி காமராஜ், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் அ.அண்ணாத்துரை, நகரசெயலாளர் கா.தென்னவள், புலவஞ்சி அண்ணாத்துரை, அத்திவெட்டி ராஜ்குமார், சொக்கனாவூர் சிவாஜி, பட்டுக்கோட்டை சக்திஆகியோர் முன்னிலையில் பட்டுகோட்டை மாவட்ட திராவிடர் கழம் சார்பில் முதல் தவணையாக 70 ஆண்டு சந்தா 100 அரையாண்டு விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். முன்னாவல்கோட்டை வீரமணி, முன்னாவல் கோட்டை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் க.சுமதி, ஆங்கில ஆசிரியர் இராமச்சந்திரன், முன்னாவல்கோட்டை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேல்குமார், சுந்தர், பிரேமா, ஆதனூர் வீர.பாங்கர் ஆகியோர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
நீடாமங்கலம் ஒன்றியப் பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன் 5 ஆண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் மேலும் 50 சந்தாக்கள் திரட்டித் தருவதாக உறுதியளித்தார். ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன், அ.தி.மு.க நீடாமங்கலம் நகர செயலாளர் ஷாஜகான், காளாச்சேரி பள்ளி தலைமை ஆசிரியர் திலகா, நீடாமங்கலம் விஜயக்குமார் (தி.மு.க), நீடாமங்கலம் ஊராட்சிமன்ற உறுப்பினர் அருள்செல்வன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் சார்பில் முதல் தவணையாக விடுதலை சந்தா ரூ 80,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு இரண்டு ஓர் ஆண்டு சந்தாவை வழங்கினார். புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் வீரையா, அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து ஆகியோரிடம் அறந்தாங்கி ஒன்றிய திமுக செயலாளர் குல.சந்திரகுமார், அறந்தாங்கி அய்டியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் பகுத்தறிவு சிந்தனையாளர் தந்தை பெரியார் மீதும் தமிழர் தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் ஷேக் சுல்தான் 5 ஆண்டு சந்தாக்கள், திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவி 10 ஆண்டு சந்தாக்களை வழங்கினர். சென்னை மாநகராட்சி வார்டு 188ஆவது மன்ற உறுப்பினர் சமீனா செல்வம் விடுதலை ஓராண்டு சந்தா, மாடர்ன் ரேஸ்னலிஸ்ட் ஓராண்டு சந்தாவை வேலூர்பாண்டுவிடம் வழங்கினார். உடன் பாண்டு மகன் அறிவன் (மடிப்பாக்கம்.18.7.2022)
திருச்சி தி.மு.க மாணவரணி மாவட்ட தலைவர் ந.கண்ணன் மற்றும் திராவிடர் தொழிலாளரணி சட்ட ஆலோசகர், தி.மு.க 19ஆவது வட்ட செயலாளர்நலங்கிள்ளி 10 அரையாண்டு விடுதலை சந்தாக்களை திருச்சி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.சங்கீதா, மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவர் கு.அமுதா, மகளிரணி துணைத் தலைவர் வசந்தி ஆகியோரிடம் வழங்கினர் (17.7.2022). ஓமலூர் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன், ஓமலூர் பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் புஷ்பா, ஓமலூர் பேரூராட்சி மன்றத்தின் கவுன்சிலர் காயத்ரி கணவர் பிரகாஷ் ஆகியோர் ஓமலூர் சவுந்தரராசனிடம் விடுதலை சந்தா வழங்கினர். தாத்தியம்பட்டி தலைவர் கே.கருமலை அரையாண்டு சந்தா வழங்கினார். கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வு மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. உடன் புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார் ஓராண்டு சந்தா- ஆஷா கல்விநாதன், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், அரையாண்டு சந்தா - கே.குமரேசன் செங்குன்றம்.





No comments:
Post a Comment