நீலமலை, ஜூலை 18- நீலமலை மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் ஞாயிற் றுக்கிழமை மாலை 5 மணி அளவில் குன்னூர் மருத்துவர் இரா கவுதமன் இல்லத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்றது.
பெரியார் மருத்துவ குழும தலைவர் டாக்டர் இரா.கவுதமன், மாவட்ட செயலாளர் மு.நாகேந்தி ரன், மண்டல தலைவர் ஆ.கருணாகரன், ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.
பொதுக்குழு உறுப்பி னர் இராவணன், மாவட்ட துனைத் தலைவர் சத்திய நாதன், மாவட்ட ப.க செயலாளர் வாசுதேவன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீவா, சண் முகசுந்தரி, ரவி, முருகன், தினேஷ் காரமடை ஒன் றிய தலைவர் கி.வி. இராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:
தீர்மானம் 1,
விடுதலை ஆசிரியர் 60, விடுதலை சந்தா நீல மலை கழக மாவட்டத் திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்துள்ள விடுதலை சந்தாக்களை சேகரித்து தருவதென இக் கமிட்டி தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2,
மதுரையில் நடை பெற்ற பொதுக்குழு தீர் மானங்களை ஏற்று செயல் படுவதென இக்கமிட்டி முடிவு செய்கிறது
தீர்மானம் 3,
வரும் ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெ றும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு வாகனம் மூலம் நீலமலை மாவட் டத்தில் இருந்து பெருந் திரளாக கலந்து கொள் வதென கமிட்டி முடிவு செய்கிறது மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

No comments:
Post a Comment