புதுடில்லி, ஜூலை 16 - கைது என்பது ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கும் கொடூரமான நடவடிக்கை என்ப தால், கைது நடவடிக்கை மேற் கொள்வதற்கு முன்னதாக உரிய சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என சிபிஅய், காவல்துறை உள் ளிட்ட விசாரணை அமைப்புக் களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மேலும், முறையற்ற கைது நடவடிக்கைகளில் இருந்து பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக, பிணை நடை முறைகளை எளிமையாக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்குமாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒன்றிய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.அய்.) கைது நடவடிக்கைக்கு எதிராக சதேந்தர் குமார் ஆன்டில் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத் தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கு எஸ்.கே. கவுல், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி கள் அமர்வு முன்பு (11.7.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு நாட்டில் கைது நடவடிக்கை மற்றும் பிணை தொடர்பான சட் டங்கள் குறித்து முக்கியமான தெளி வுபடுத்துதல்களை வழங்கினர்.
அவர்கள் கூறியதாவது: இந்தி யாவில் உள்ள சிறைகள் விசார ணை கைதிகளால் நிரம்பி வழி கின்றன. சிறையில் இருப்போரில் மூன்றில் 2 பங்குக்கும் அதிகமான வர்கள் விசாரணை கைதிகளாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் கைதி களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் குற்ற வழக்குகளின் தண்ட னை விகிதம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது.
வழக்கு தொடர்பாக பெரும்பா லானவர்களை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் கைது நடவடிக்கை எடுக்க ப்படுகிறது. ஒருவரை கைது செய்யும்போது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 41 மற்றும் 41ஏ ஆகிய வற்றுக்கு உட்பட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இதனை அதி காரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் காவல்துறை ராஜ்யம் என்ற எண் ணம் ஒருபோதும் தோன்றக்கூடாது. ஜன நாயகம், காவல்துறை அர சாங்கம் என்பது ஒன்றுக் கொன்று எதிரெதிரானவை. கைது என்பது சுதந்திரத்தை குறைக்கும் கொடூர மான நடவடிக்கை. இதனால் கைது நடவடிக்கையை கவனமாக செயல்படுத்த வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு (CRPC) 41 மற்றும் 41ஏ ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் அம்சங் களாகும். பிரிவு 41ஏ, காவல்துறை அதிகாரி யின் முன் ஆஜராவதற்கான நடை முறையை குறிப்பிடுகிறது. அதாவது, நம்பத்தகுந்த தகவல் கிடைத்தால் அல்லது ஒருவர் அறியக்கூடிய குற்றத்தைச் செய்ததாக நியாயமான சந்தேகம் இருந்தால், புகார் அளிக்கப்பட்ட நபருக்கு தாக்கீது அனுப்ப வேண்டும். பிரிவு 41(1)இன் கீழ் கைது நடவடிக்கை தேவையில்லை. மாறாக, கைது நடவடிக்கையின்போது, சிஆர்பிசி 41 மற்றும் 41ஏ பிரிவுகளை மீறி ஒருவரைக் கைது செய்தால், குற்றம் சாட்டப் பட்டவர் பிணை பெற உரிமை உண்டு. விசாரணை அமைப்புகளும் அவற்றின் அதிகாரிகளும் சட்டப் பிரிவு 41 மற்றும் 41ஏ-இன் ஆணை மற்றும் அர்னேஷ் குமார் தீர்ப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் களுக்கு இணங்குவதற்கு கடமைப் பட்டுள்ளனர். மேலும், சட்டப் பிரிவு 41 மற்றும் 41ஏ-வை பின்பற் றாமல் கைது நடவடிக்கை மேற் கொள்ளும் அதிகாரிகள் மீது நீதி மன்றங்கள் கடும் நடவடிக்கை எடுக்கும்.
எனவே, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிர தேசங்கள், டில்லி காவல்துறை யால் வழங்கப்பட்ட நிலையியற் கட்ட ளையை, அதாவது, 2020-ஆம் ஆண்டின் ஸ்டாண்டிங் ஆணையை கவனத்தில் கொள்ள வேண்டும். இது 41ஏ மூலமான தேவையற்ற கைதுகளை மட்டுமன்றி, பல்வேறு நீதிமன்றங்களில் பிணை விண் ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலு வையில் இருப்பதையும் தடுக்கும். பிணை விண்ணப்பங்கள்- சில விதிவிலக்குகளைத் தவிர்த்து- இரண்டு வார காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும். எந்தவொரு இடைப் பட்ட விண்ணப்பமும் தவிர்த்து, முன் பிணைக்கான விண்ணப் பங்கள் ஆறு வார காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும்.
சிறப்பு நீதிமன்றங்கள் அமைப் பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பிக்கும் வழி காட்டுதல்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இணங்க வேண்டும். சிறப்பு நீதி மன்றங்களின் தேவை குறித்து மாநில அரசுகளுடன் கலந்தா லோசித்து உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களின் தலைவர் பதவியில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
எனவே, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இதுதொடர்பாக நான்கு மாதங் களுக்குள் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் நிலை அறிக் கைகளை தாக்கல் செய்ய வேண்டும். அதே போல, பிணை வழங்குவதை முறைப்படுத்த, பிணை சட்டத்தின் தன்மையில் ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கலாம். இவ் வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment