மிதக்கும் சூரிய மின் பலகைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

மிதக்கும் சூரிய மின் பலகைகள்

நீர் தேக்கத்தின் மேல், போட்டோ வோல்டாயிக் செல் எனப்படும் சூரிய மின் பலகைகளை மிதக்க விடுவதுதான் 'புளோட்டோவோல்டாயிக்' மின் உற்பத்தி முறை. நீரில் மின் உற்பத்தி செய்யும் அணைக்கட்டுகள், இனி சூரிய மின்னாற்றல் மய்யங்களாகவும் மாறும்.

உலக நீர்த்தேக்கங்களில், வெறும் 10 சதவீதத்தில் சூரிய மின் உற்பத்தி செய்வதாக வையுங்கள்.இதில் கிடைக்கும் மின்சாரம், உலகில் பெட்ரோலிய எரிபொருளால் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு இணையாக இருக்கும். 

எனவேதான், கனடாவும் பிரேசிலும் மிதவை சூரிய மின் திட்டங்கள் மூலம் 2050க்கான, சூரிய ஆற்றல் இலக்கை எட்டிவிட திட்டமிட்டுள்ளன.

நீரில் மிதப்பதால், மின்பலகைகள் வெப்பமடையாது. இதனால், மின் உற்பத்திகூடும். மேலும், பெருமளவு நீர் ஆவியாவதை, மிதக்கும் மின்பலகைகள் தடுத்துவிடும்.

No comments:

Post a Comment