சாலையில் கிடைக்கும் மின்சாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

சாலையில் கிடைக்கும் மின்சாரம்!

மின் வாகன மின் கலன்களில் மின்னேற்றம் செய்ய ஆகும் நேரம், பெட்ரோல் போட ஆகும் நேரத்திற்குள் இருக்கவேண்டும். இதுதான் மின் வாகன பயனாளிகள் எதிர்பார்ப்பு. ஒரே மின்னேற்றத்தில், சில நூறு கி.மீ. தொலைவுக்கு மின் வாகனம் செல்லவேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பு.

இதற்கு தீர்வாக மின்கலன்களில் புதுமைகள் செய்வதற்கு பதில், சாலைகளையே மின்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் என்கிறது இத்தாலியின் ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம்.

உலகின் அய்ந்தாவது பெரிய வாகன தயாரிப்பாளரான இது, இத்தாலியில் 1,050 மீட்டர் நீள சாலையை அமைந்து, தனது டைனமிக் வயர்லெஸ் பவர் டிரான்ஸ்பர் என்ற தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது.

இந்த சாலையின் நடுவே, கம்பியின்றி மின்சாரத்தை செலுத்தும் தகடுகள் பதிக்கப்பட்டுஉள்ளன. அதேபோல மின் வாகனங்களின் அடியில் மின் வாங்கிகள் பொருத்தப்பட்டிருந்தால், சாலையில் அவை பயணிக்கும்போதே மின் கலனில் மின்னேற்றம் நடக்கும்.

இதனால், ஒரு மின் வாகனம், மின் னேற்றத்திற்காக எங்கும் நிற்க வேண்டியதில்லை. மின் கலனில் சார்ஜ் கம்மியாக உள்ளதே என்ற கவலையும் தேவையில்லை.

 சோதனைகளில் வெற்றி கண்டுள்ள ஸ்டெல்லான்டிஸ், விரைவில் இந்த நுட்பத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது.

No comments:

Post a Comment