பிஜேபியின் நீண்ட கால திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

பிஜேபியின் நீண்ட கால திட்டம்

ருச்சி குப்தா

மதவெறிக் கூச்சலிடுவது - சிறுபான்மை மத மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்துவதில் மட்டும் அன்றி, அதன் அரசியலிலும் மிதவாதத்தைக் கடைப்பிடிப்பது என்ற நீண்ட கால வழி ஒன்றுதான் பா.ஜ. கட்சிக்கு உள்ளது.

பா.ஜ.க. இப்போது குறுக்குச் சாலைகளைக் கடந்து கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டில் வெறும் இரண்டு மக்களவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த இந்தக் கட்சி இந்திய நாட்டின் அனைத்துப் பரப்பிலும் முடிவெடுக்கும் அரசு இயந்திரத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து நிலைகளிலும் ஆட்சி அதிகாரத்தை இன்று கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க.வின் அரசியலால் பாதிக்கப்படாத எந்த மாநிலமும் இந்தியாவில் இல்லை. ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் உள்ள பா.ஜ.க.வை இப்போது எதிர் கொண்டு இருக்கும் கேள்வியே வாக்காளர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வைத்திருக்கும் - மேலும் தீவிரமான வலதுசாரி அமைப்பாக பா.ஜ.க. ஆகிவிட வேண்டுமா அல்லது பல்வேறுபட்ட  வாக்காளர்களைக் கவர்ந் திழுக்கும் வகையில் தனது செயல்பாட்டை மித வாதமாக ஆக்கிக் கொள்ளப் போகிறதா என்பதுதான். இத்தகைய இரு எண்ணங்களும் பா.ஜ.க.வில் நிலவு கின்றன என்பதற்கான அடையாளங்கள் தெரி கின்றன. ஆனால், தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டிருக்கும் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் - இறை தூதர் முகமது நபிக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் அனைத்துலக அளவில் இந்திய அரசுக்கு ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கியுள்ள நிலையில், தீவிரமான இந்து மதவெறி நிலைப்பாட்டுடன் மிதவாத நிலைப் பாடும் இணைந்து இருக்க இயலும் என்று ஊகிப்பது ஒரு மாபெரும் தவறாகும்.

வன்முறை செயல்பாடுகளைத் 

தூண்டும் பேச்சும் செயல்பாடுகளும்

மத தீவிரவாதம் மற்றும் மத அடிப் படையில் மக்களை பிளவுபடுத்துதல் ஆகியவற்றை, சிறுபான்மை மத மக்கள் மீது வெடித்துக் கிளம்பும் வெறுப்புப் பேச்சுகளில் மட்டுமல் லாமல், சிறுபான்மை மக்கள் இனப் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று தரம் சன் சத்துக்களில்  வெளிப் படையாக  அழைப்பு விடுக்கப்பட்டதும், உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் போது எழுந்த 80-20 என்ற வெறிக் கூச்சல் மற்றும் இதர நிகழ்வுகளிலும் காண முடிகின்றது என்பது மட்டுமின்றி முஸ்லீம்களுடன் மோதல் மேற்கொள்ளச் செய்வதற்கு திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் கர்நாடக மாநில ஹிஜாப் முகக் கவசம் அணியும் விவகாரம், குருகிராமில் எழுப்பப் பட்ட நமாஸ் விவகாரம், மசூதிகளில் சிவலிங்கங் களைத் தேடிக் காண்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு ஆகியவை முஸ்லிம் மக்களின் உணர்ச் சிகளைத் தூண்டி விடுவதாக அமைந்ததையும் நம்மால் காண முடிகிறது. இந்து  அடையாளத்தின் அடிப்படை அதன் வளம் நிறைந்த கலாச்சாரக் கோட்பாடாக இல்லாமல், ஒரு முஸ்லிம் கதாநாய கனுக்கு எதிரான வில்லனாக நடிக்கும் வரை இத் தகைய பிரச்சினைகள் எல்லாம் இந்து அடை யாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவோ ஒன்று திரட்டவோ எந்த விதத்திலும் தொடர்பு உடையவை அல்ல. 

தீவிரமான பா.ஜ.க. தலைவர்களும்  தொண்டர் களும் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் தங்களின் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் இரண்டு வழிகளில் விளக்குவதற்கு முயல்கின்றனர். முதலாவதாக மிக மிக மோசமான நிகழ்வுகளை நிகழ்த்தியவர்களிடம் இருந்து, அத்தகைய நபர்களை சில்லறைக் கூட்டம் என்ற அடையளமிட்டோ அல்லது சண்டையில் தங்களின் போட்டியாளருடன் போட்டியிடும்போது கூடுதலாக தங்கள் கை ஓங்க வேண்டும் என்பதற்காகவோ அவர்களிடமிருந்து கட்சியை தூரமாக தள்ளி வைத்து விளக்கம் அளிப்பது. இரண்டாவதாக தங்களின் குரல்கள் இதுவரை கேட்கப்படாமல் அடக்கி வைக்கப்பட்டு இருந்த கீழ்நிலை தலைவர்கள் மற்றும் தொண் டர்களின் அதிகப்படியான ஆர்வத்தால் மேற்கொள் ளப்பட்டவை என்று கூறி ஒதுக்கித் தள்ளுவது. அத்தகைய சில்லறை ஆட்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் எந்த விதமான கண்டனங்களும் தெரிவிக்கப்படாமல் இருப்பதாலும் இந்த விளக்கங்கள் எல்லாம் மன நிறைவு அளிப் பவையாக இல்லை. அதற்கு மாறாக, தங்களுக்கென்று ஓர் அடையாளத்தைக் காணவும் பா.ஜ.க. தலை மையின் ஆசி மற்றும் ஆதரவுடன் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவும் இந்த தொண்டர்கள் முயல்கின்றனர்.  இந்த உத்தி தவறாக வழி நடத்திச் செல்லும் ஒன்றாகும் என்பதால் அதுபற்றி மறுசிந்தனை செய்வது மிக மிக அவசியமானதாகும். சிறுபான்மை மத மக்கள்மீது வெடித்துக் கிளம்பும் வெறுப்பு தேசிய நலன்களுக்கு எதிரானது மட்டு மின்றி, பா.ஜ.க.வின் நீண்ட கால நலன்களுக்கும் எதிரானது ஆகும். 

புதுப்புது அமைப்புகளை உருவாக்க முயற்சிக்கும் தலைவர்கள் தேசிய  நீரோட்ட எல்லைகளுக்கு வெளியேயோ, சட்டத்திற்கு புறம்பாகவோ வேலை செய்வது அல்லது சமூக பொருளாதார முதலீடுகள் இல்லாதது போன்ற பல்வேறு பட்ட காரணங்களாலும் கூர்மையான செய்திகளை அனுப்புவது மற்றும் மத அளவில் மக்களை பிளவுபடுத்துவது போன்ற செயல்களால் அதிக அளவு அதிர்ச்சி அளிப்பதன் மூலம் தீவிர ஆதரவாளர்களின் ஆதரவைக் கவருவதற்கு முயல்பவர்களாகவே உள்ளனர். என்றாலும், அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்று ஓர் அளவுக்கு வளர்ச்சி அடையும் போது, தங்கள் நிலையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நியாயத் தன்மையை தங்களுக்கு தேடிக் கொள்வதற்கு முயற்சி செய்கின்றன. ஒரு மக்களாட்சியில் தேர்தல்களில் வெற்றி பெறுவது அத்தகைய நியாயத் தன்மையை அவர்களுக்கு அளிக்கிறது. ஆனால் பிரிவினை செயல் திட்டம் அதிக அளவில் செயல்படுத்தப்படுவது தேர்தல் வெற்றி மற்றும் ஆளும் கட்சி ஆட்சியில் சாதனைகள் பற்றிய பதிவு இவை இரண்டையும் நியாயம் அற்றதாகச் செய்து விடுகிறது.

இனி செல்லவேண்டிய பாதை

கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க. தனக்கு எதிரான கண்டனங்களையும் விமர்சனங்களையும் உயர் தட்டு மஃபியாக்களுடையவை என்று நிராகரித்து உதறித் தள்ளி வந்து உள்ளது. நாட்டு மக்கள் தொகையில் 15% அளவினரை ஒதுக்கி விட்டு தேசிய நீரோட்டத்தின் நியாயத் தன்மையைப் பெற முடியாது என்பது சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட இயன்றதாகவே இருக்க வேண்டும். இதன் கார ணங்கள் இரண்டு. சங்கடத்தை அளிக்கும் மிகைப் பட்ட பேச்சும் செயல்களும் எதிர்பாராத அசாதாரண மானவை அல்ல. ஆனால் அது பிரிவினை வாதத்தை மிகைப்படுத்திக் கூறும் அரசியல்வாதிகளின் தவிர்க்க இயலாத மனப் போக்குதான்.

தங்கள் தொண்டர்கள் பின்பற்றுவதற்கான பழக்க வழக்கங்களை வழிகாட்டிகளை நிர்ணயித்து அவற் றுக்கான எல்லைகளை கட்சியின் தலைமை நடை முறைப்படுத்தா விட்டால், கீழ் நிலைத் தலைவர்கள் மேலும் மேலும் இழிவான செயல்களை செய்யவே முற்படுவர். இதனால் கட்சித் தலைமையின் சவுக ரியமான பகுதியில் இருந்தே கட்சி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

பா.ஜ.க. கட்சியின் இரண்டு செய்தித் தொடர்பாளர் களின்மீது பா.ஜ.க. தலைமை மேற்கொண்ட நடவ டிக்கைக்கு எதிராக அதன் ஆதரவாளர்களின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ள கண்டனத்தில் இருந்து ஏற்கெனவே இது தெரிய வருகிறது. நாட்டின் 15% மக்களுடனான மோதலை பா.ஜ.க.வின் தலை மையில் சில பிரிவினர் மேற்கொண்டு வருவது - தவிர்க்க இயலாதபடி சட்டத்தின் ஆட்சியை சிதைத்து, அரசாட்சியின்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவும் செய்யும்.

பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத நிலையில், தொடர்ந்த  தேர்தல் வெற்றிகள் - மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று  ஊகிப்பது ஒரு பெருந் தவறாகும். தொடர்ந்த வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் பரவலான வன்முறைச் செயல்கள் காரண மாக நாட்டின் மக்கள் சேர்வும் மனக் கசப்பும் கொண்டவர்களாக ஆகி விட்டனர் என்பதற்கான சான்றுகள் நாடெங்கும் காணப்படு கின்றன. ஆனாலும் தங்கள் மன நிறைவின்மையை ஒரு பொருள் பொதிந்த அரசியல் எதிர்க்கட்சி யின் மேடையாக மடை மாற்றம் செய்ய அவர்களால் இயல வில்லை. மேலும் பா.ஜ.க. இப் போது கடைப்பிடிப்பது போன்ற அரசியல், இரண்டு முறை பதவி யில் இருந்து விட்டதால் பா.ஜ.க. மீது மக்களுக்கு பொதுவாக ஏற்பட இயன்ற தவிர்க்க இயலாத மக்களின் மன நிறைவின்மையை சமன் செய்வது அவ்வளவு எளிதானதாக பா.ஜ. கட்சிக்கு இருக்காது. எனவே பா.ஜ.க.வுக்கு உள்ள - நீண்ட காலத்துக்குபயன் நிறைந்ததும் நடைமுறை சாத்தியம் கொண்டதுமான ஒரே வழி. வெறிக் கூச்சல்போடுவதில் மட்டும் இல்லாமல் அதன் அரசியலிலும் மிதவாதத் தன்மையுடன் நடந்து கொள்வது மட்டும்தான். தற்போது பா.ஜ.க.வால் பின்பற்றப்படும் மக்கள் நலத்தையே நோக்கமாகக் கொண்ட கலாச்சார தேசியம்  - தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் இருப்பதும் கட்சியின் எதிர்காலத் துக்காக தயாராக இருக்கும் பிரச்சாரத்திற்கான பொருள்களுமாக இருப்பவையும் ஆகும். எதிர்காலத் தில் பா.ஜ.க. எவ்வாறு உருவாகப் போகிறது என்பதை அக்கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். என்றாலும் கூட அக்கட்சியில் உள்ள தீவிரவாதக் குழுக்கள், தொண்டர்களின் செயல் பாட்டினை ஒரு கட்டுக்குள் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதுடன், கட்சிக்குள் முன்னேற்றம் அடைவ தற்கான வழி - வெறுப்பைத் தூண்டும் பிரச்சாரத்தில் இல்லை என்பது தெளிவாக ஆக்கப்படவும் வேண்டும். 

  நன்றி : 'தி இந்து' 13-06-2022 

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment