ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் அஜெண்டா நிறைவேறுகிறது குஜராத் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே சமஸ்கிருதம் கட்டாய பாடமாம்- மருத்துவக் கல்வியிலும் சமஸ்கிருதம் கட்டாயமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் அஜெண்டா நிறைவேறுகிறது குஜராத் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே சமஸ்கிருதம் கட்டாய பாடமாம்- மருத்துவக் கல்வியிலும் சமஸ்கிருதம் கட்டாயமாம்

அகமதாபாத், ஜூன் 28 - தேசியக் கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக, ஒன்றாம் வகுப்பு முதலே சமஸ்கிருதத்தை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை வழங்கியிருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. 

சமஸ்கிருதம் படிக்காதவர்கள், பி.ஏ.எம்.எஸ் எனப்படும் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படிப் புகளில் சேருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும்  ஆர்.எஸ்.எஸ். பரிந்துரை வழங்கியி ருப்பதாக கூறப்படுகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்து வது குறித்து ஆர்எஸ்எஸ் மூத்த பிரதிநிதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மூத்த பிரதிநிதிகள், கடந்த ஏப்ரல் மாதம், குஜராத் கல்வியமைச்சர் ஜிது  வகானி, குஜராத் மாநில கல்வித்துறையின் மூத்த அதி காரிகள் மற்றும் பாஜக-வின் பொதுச்செயலாளர் ரத்னாகர் ஆகியோருடன் கலந்துரையாடலை நடத்தி யுள்ளனர். அரசாங்கத்தின் சுமார் 25 மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த சந்திப் பில், வித்யா பாரதி, ஷைஷிக் மகாசங், சம்ஸ்கிருத பாரதி,  பாரதிய ஷிக்சன் மண்டல் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு களின் 20 பிரதிநிதிகள், சமஸ்கிருத கற்பித்தல் துவங்கி, பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றுக்கு இடம்  கொடுக்கவும், வேதக் கணிதத்தை கட்டாயமாக்கவும், உபநிடதம் மற்றும் வேதங்களின் அடிப்படையில் மதிப் புக் கல்வியை வழங்கவும், தனியார் பல் கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தவும் ஏராளமான முன்மொழிவுகளை வழங்கி யுள்ளனர். அதில்தான், சமஸ்கிருதத்திற்கு ஒரு வாரத்தில் குறைந்தது ஆறு பாட வேளை களை கட்டாயமாக ஒதுக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவது அறிந்ததே. ஆரம்ப வகுப்புகளில் ‘சிறந்த ஆங்கிலத்தை கற்பிக்க வேண்டும்’ என்பதுடன், இந்திய மொழிகள் கற்பித்தலைத் தவறவிடக்கூடாது என்று அது குறிப்பிடுகிறது. எனினும் அந்த மும்மொழிக் கொள்கையில், பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டிய அந்த மூன்றாவது மொழி என எந்த மொழியையும் குறிப்பிடவில்லை. முன்பு இந்தியை குறிப் பிட்டு விட்டு, எதிர்ப்பு எழுந்ததும், அதனை நீக்கி னார்கள். மூன்றாவது மொழியை மாண வர்களின் விருப்பத்திற்கு விடும் அதே நேரத் தில்,  அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்வீக மாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஒன்றும் வைக்கப்பட்டது. எனினும், எந்த இடத்திலும் சமஸ்கிருதத்தை கற்றுத்தருமாறு குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் பரிவார அமைப்புக்களும், கட்டாயமாக சமஸ் கிருதத்தை கற்பித்தாக வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு வலுவான முறையில் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் ஹிமஞ்சய் பாலிவால் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு அளித்த பேட்டியில், “தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தைப் பற்றி  தெளிவில்லாமல் பேசுகிறது. தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருத மொழிக்கு ஆதர வானதா அல்லது அதற்கு எதிரானதா என்பது  தெளிவாகத் தெரியவில்லை” என அங் கலாய்த்துள்ளார்.  மேலும், “தேசிய கல்விக் கொள்கை வழிமுறைகளை மட்டும்தான் வகுத்துள்ளது. ஆனால், வழிமுறைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. எந்த மொழியும் மாணவர்களிடம் திணிக்கப்படாது என்று தேசியக் கல்விக் கொள்கை கூறி னாலும், பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயமாக கற்பிக்கப்படு கிறது. அதுபோலவே தற்போது ஒன்றாம் வகுப்பி லிருந்தே சமஸ்கிருதத்தைக் கற்பிக்க, மாநில அரசாங்கத்துடன் அனைத்து மட்டங்களிலும் ஆலோசனை செய்யப் படுகிறது’’ என்றும் பாலி வால் குறிப்பிட்டுள் ளார். இவர், சமஸ்கிருத பாரதியின் குஜராத் சங்கத்தின் பிரதிநிதியாக உள்ளார்.

பள்ளிக் கல்வியில் மட்டுமல்லாமல், இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி யிலும், குஜராத்தியை முதல் மொழியாகவும், சமஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாகவும் கற்பிக்க வேண்டும், மூன்றாவது விருப்ப மொழி யாக எதை வழங்குவது என்பதை அரசு தீர்மானிக்கலாம் என்பது ஆர்எஸ் எஸ்.ஸின் பரிந்துரையாகும். 

மருத்துவக் கல்வியில் சமஸ்கிருதம் கட்டாயம்

மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் படிக்காத மாணவர்கள் பி.ஏ.எம்.எஸ் (இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) படிப்புகளில் சேர தடை விதிக்க வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். பரிந்துரை அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் - குஜராத் அரசு அதிகாரிகள் இடையிலான கூட்டம் அடுத்ததாக ஜூலை மாதத்திலும் நடக்கவிருப்பதாக கூறப்படு கிறது. ஆர்.எஸ்.எஸின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து பேசியிருக்கும் குஜராத் மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி, “நாங்கள் பல  ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம். சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆராயும். அதன்படி இவை செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். 

குஜராத் அரசு, கடந்த மூன்று ஆண்டு களாகவே சமஸ்கிருதத்தைக் கற்பிக்கும் திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. எடுத் துக்காட்டாக 2019 ஆம் ஆண்டில் குஜராத் சமஸ்கிருத கல்வி  வாரியத்தை தொடங்கி யுள்ளதைக் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment