எந்திரருக்கு தயாராகும் தோல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

எந்திரருக்கு தயாராகும் தோல்!

தொடு உணர்வுள்ள செயற்கைத் தோலை உருவாக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இங்கி லாந்தின் கிளாஸ் கோ பல்கலைக்கழக பொறியாளர்கள், அத்த கைய மின்னணு தோலை வடிவமைத்துள்ளனர்.

'இ-ஸ்கின்' எனப்படும் அந்த செயற்கைத் தோல், மனிதத் தோலில் தொடு உணர்வைத் தரும் நியூரான்களை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு ரோபோவின் கையில் பொருத்தப்பட்ட இ-ஸ்கின்னின் மீது ஒரு பொருள் பட்டால், அதை உணரும் உணரிகள், தொட்ட இடத்திற்கு அருகே உள்ள பிற உணரிகளுக்கு தகவலை அனுப்புகின்றன. இந்த உணரிகளுக்கு கணினித் திறன் உண்டு.

எனவே, ஒரு சிலிக்கன் சில்லுக்கு தகவலை அனுப்பாமல், அருகில் உள்ள உணரிகளே அந்தப் பொருளை விட்டு விலகுவதா அல்லது பிடித்துக்கொள்வதா என்று முடிவெடுத்து தகவலை அனுப்பிவிடுகின்றன. அதன்படி, ரோபோ கையும், விரல்களும் செயல்படுகின்றன. அதாவது, செயற்கை இ-ஸ்கின் பூராவும் மூளை தான். 'சயின்ஸ் ரோபோடிக்ஸ்' இதழில் இந்த கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது.


No comments:

Post a Comment