ஒலி உறிஞ்சும் பூச்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

ஒலி உறிஞ்சும் பூச்சி!

வவ்வால்கள் ஒலியை அனுப்பி, வரும் எதிரொலியை வைத்து இரையை 'லபக்' செய்பவை. சில அந்துப் பூச்சிகள் வவ்வாலின் ஒலி அலைகளை தம் மீது பட்டுத் திரும்ப விடாமல் செய்துவிடுகின்றன.

'அந்தேரயே பெர்னியி' என்ற அந்துப் பூச்சியின் இறக்கைகளின் மேல் உள்ள செதில்கள் 87 சதவீத செவியுணரா ஒலி அலைகளை உறிஞ்சிக்கொள்கின்றன.இதனால் அவை வவ்வாலுக்கு இரையாகாமல் தப்புகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி உருவாக்கிய இந்த உத்தியை, இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நுட்பத்தை ஒரு காகிதத்தின் மேல் உருவாக்க அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.அப்படி செய்ய முடிந்தால் அதை, ராணுவ வாகனங்களின் மேல் பொருத்தி, எதிரிகளிடமிருந்து தப்பிக்க உதவலாம்.

மேலும், செவி உணரும் ஒலி அலைகளையும் அந்துப் பூச்சியின் நுட்பம் உறிஞ்ச உதவினால், ஒலிப் பதிவுக்கூடங்களிலும் இந்த நுட்பம் பயன்படும்.


No comments:

Post a Comment