அறிவியல் - சில வரிச் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

அறிவியல் - சில வரிச் செய்திகள்

மாலுமியில்லாத கப்பல்!

மாலுமியோ, மனித உதவியாளர்களோ இல்லாத கப்பலை, வெள்ளோட்டம் பார்த்துள்ளது சீன நிறுவனமான, சி.எஸ்.எஸ்.சி ஹுவாங்பு வென்சோங் ஷிப்பிங் கோ. கடல் மற்றும் விமானப் படைகளுக்காக ட்ரோன்களை இந்த தானோட்டிக் கப்பல் சுமந்து செல்லும். முப்பரிமாண கேமிராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இக் கப்பல் இயங்குகிறது. அண்மையில் 3 மணி நேர வெள்ளோட்டத்தை இந்த தானோட்டிக் கப்பல் முடித்துள்ளது.

திரையில்லாப் படம்!

ஒளியைத் தடுக்க திரையின்றி படம் காட்டுவதுதான் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது லுக்கிங் கிளாஸ் பேக்டரி. கடந்த ஆண்டு '8-கே' துல்லியமுள்ள 32 அங்குல முப்பரிமாணப் படம் காட்டும் ஹோலோகிராம் கருவியை லுக்கிங் கிளாஸ் அறிமுகப்படுத்தியது. தற்போது 'லுக்கிங் கிளாஸ் 65' என்ற புதிய ஹோலோகிராம் கருவி 65 அங்குல படத்தைக் காட்டுகிறது. விரைவில் ஹோலோகிராம் கருவிகள் தொலைக்காட்சிக்கு மாற்றாக வரப்போகின்றன.

டைனோசருக்கும் உண்டு  தொப்புள்!


கற்பனையாக வரையப்படும் டைனோசர் படங்களில், தொப்புள் இருக்காது. ஆனால், வழக்கொழிந்துபோன டைசர்களுக்கும் தொப்புள் உண்டு என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் கண்டெடுக்கப்ட்ட, சில கல்லாகிப்போன டைனோசர் உடல்களில் ஒரு பகுதியில் இந்த தொப்புள் இருந்துள்ளது. இது 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். டைனோசர் உலகில் இத்தகைய கண்டுபிடிப்பு நடந்திருப்பது இதுவே முதல் முறை.

பிளாஸ்டிக் தின்னும் புழு!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு குறிப்பிட்ட புழுவால் பிளாஸ்டிக்கை செறிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். ஜோபோபாஸ் மொரியோ என்ற அந்த புழுக்களுக்கு வெறும் பிளாஸ்டிக்கை மட்டும் உண்ணக்கொடுத்தனர் விஞ்ஞானிகள். அதை அப்படியே உண்டு அவை செறித்ததோடு, அதிலிருந்து ஆற்றல் பெற்று, சிறிதளவு எடை கூடவும் செய்தன. இதிலிருந்தே, இப் புழுக்களின் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளால் பிளாஸ்டிக்கை கரைத்து, ஆற்றலை பெற முடியும்என்பது தெளிவாகிறது.


No comments:

Post a Comment