Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
விஜயபாரதம் - தினமலர் கும்பல் பரப்பும் செய்தி உண்மையா?
May 15, 2022 • Viduthalai

தினமலர் இணையப் பக்கம் ஒன்றில்(https://www.dinamalar.com/news_detail.asp?id=3028070)  ”முத்துப் பல்லக்கில் ஈ.வே.ராமசாமி பவனி: வைரலாகும் புகைப்படம்” என்ற தலைப்பில் பின்வரும் செய்தி ஒன்று படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.

முத்துப் பல்லக்கில் ஈ.வே.ராமசாமி பவனி: வைரலாகும் புகைப்படம்

சென்னை: திராவிடர் கழகத்தை தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி முத்துப்பல்லக்கில் பவனி வந்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி யுள்ளது.

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்திற்கு திராவிடர் கழகம் (தி.க.,), திமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக மயிலாடு துறை ஆர்.டி.ஓ., பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதித் திருந்தார். ஆனால், ஆன்மிகவாதிகள், பொது மக்கள் இடையே இது கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பட்டினப் பிரவேசத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்தார். இதனையடுத்து ஆர்.டி.ஓ., தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், 1972ம் ஆண்டு கடலூர் மாவட் டம் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து ஏராளமானோர் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈ.வே.ராமசாமி முத்துப் பல்லக்கில் பவனி வந்துள்ளதாக புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

-இவ்வாறு தினமலர் இணையத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தினமலர் இணையதளத்தின் செய்தியைப் படித் தாலே அதன் நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிடும். மனிதனை மனிதன் சுமப்பது சுயமரியாதைக்கு இழுக்கு; மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் எழுப்பிய குரல் தமிழ்நாட்டில் தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இத்தனை போக்குவரத்து வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும், பல்லக்கில் பவனி வருவேன் என்று அடம்பிடிப்பது மனிதத் தன்மையற்றது என்ற உணர்வு வெகுமக்கள் மத்தியில் பெருகியிருக்கும்போது, அதை நேரடியாக எதிர்கொள்ள வக்கில்லாத ஆரியக் கூட்டம் வழக்கம் போல் பொய்மூட்டையோடு கிளம்பியிருக் கிறது.

உரிமைக் குரல் எழுப்புபவரை நோக்கியே, சாணி யடிப்பது போல் அவதூறுகளை அள்ளிவீசிவிட்டு ஓடிவிடும் களவாணித்தனம் அவர்களின் முதலீடு! இந்தச் செய்தியும் அப்படித் தான்.

1. வைரலாகியிருக்கிறதாம் இந்தப் படம். தலைப்பிலேயே அப்பட்டமான பொய்! வைரலாக்க வேண்டும், அதாவது பரவலாகப் பரவிட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தச் செய்தி. ‘தினமலர் லயே போட்டிருக்கான் பா’ என்று வதந்திக்கு செய்தி என்னும் பொய்ச் சிறகு கட்டிப் பறக்கவிடும் முயற்சி. அது சரியா என்றெல்லாம் ஆராயும் பொறுப்பைத் தட் டிக் கழிக்கும் அவாளின் வழக்கமான ’பத்ரிகா தர்மம்’. ஏனெனில் பொய் என்று தெரிந்தே தானே பரப்பப் படுகிறது.

2. செய்தியில் இடம்பெற்றிருக்கும் படத்துக்கும், அதிலுள்ள குறிப்புக்கும் தொடர்பே இல்லை. படத்தில் அமர்ந்திருப்போர் தந்தை பெரியாரும், மேனாள் அமைச்சர் கே.ஏ.மதியழகனும்!

செய்தியில் இருப்பதோ கடலூர் பெரியார் சிலை திறப்பு விழா பற்றிய குறிப்பு. அதில் தான் திருப்பாதிரிப் புலியூரிலிருந்து பெரியார் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். 

3. “செருப்பொன்று போட்டால், சிலையொன்று முளைக்கும்” என்று பாடல்பெற்ற நிகழ்வு தான், கடலூரில் 13.8.1972 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழா! தந்தை பெரியாரின் சிலையை சி.பி. சிற்றரசு அவர்களின் தலைமையில், தந்தை பெரியார் முன்னிலையில், அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்துவைத்த பெரு விழா! அந்த விழாவை நடத்தியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் (குதிரைகள் பூட்டப்படும் பேட்டன் வாகனத் தில்) அமர்ந்திருந்தார் தந்தை பெரியார். லாரன்ஸ் சாலைக்கு ஊர்வலம் வந்தபோது, முதலமைச்சர் கலைஞர் அவர்களும், அமைச்சர்கள் ப.உ.சண்முகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும், அன்பிலாரும் அய்யா அமர்ந்திருந்த வாகனத்தில் இணைந்து கொண்டார்கள். மக்கள் வெள்ளத்தில் கொண்டாட் டத்துடன் அழைத்துவரப்பட்டார்கள் தலைவர்கள். 

4. அப்படியெனில் பெரியாரும் மதியழகனும் அமர்ந்திருப்பது?

அது கரூரில் நடந்த நிகழ்ச்சி. ஆண்டு 1968 அக்டோபர் 6.

தந்தை பெரியாரின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், அய்யாவுக்கு நகரும் குடில் (வேன்) வழங்கும் விழாவும் அன்று நடந்தன. அதையொட்டி நடைபெற்ற பேரணியில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழைத்து வரப்பட்டார் பெரியார். உடன் அமர்ந்திருந் தார் அமைச்சர் கே.ஏ.மதியழகன். அப்போது வந்த செய்தியிலும் அப்படித்தான் இடம்பெற்றிருக்கிறது. இதைத் தான் பல்லக்கு என்று கூசாமல் பொய் சொல் கிறது தினமலர்.

5. ‘நாங்களாகச் சொல்லவில்லை. இணையத்தில் வைரலான படத்தைத் தான் நாங்கள் எடுத்துப் போட் டோம்’ என்று நழுவலாம் தினமலர். ஆனால், அதன் முதலாளி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் விஜயபாரதம் இணைய தளத்தில், கடலூர், கரூர் இவற்றோடு தஞ்சை யில் முத்துப்பல்லக்கில் தந்தை பெரியாரும், ஆசிரியர் வீரமணி அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள் என்ற செய்தி கவிஞர் கருணானந்தத்தின் “தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு” நூலில் இடம்பெற்றிருக்கிறது என்று ஆதாரத்திற்கு அப் பக்கத்தையும் படமெடுத்துப் போட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

கவிஞர் கருணானந்தம் எழுதியது பொய்யா? இல்லை, உண்மை தான். விடுதலையில் வந்த செய்தி யைத் தான் அவர் பதிவு செய்திருக்கிறார். 

எனில், பெரியார் முத்துப் பல்லக்கில் வந்தார் என்று இருக்கிறதே! உங்கள் தலைவரே, பல்லக்கில் பவனி வந்திருக்கிறார். இப்போது ஆதீனம் வரக் கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி உண்டா? இதுதான் அவர்கள் கேட்பதும், மக்கள் கேட்க வேண்டு மென்று அவர்களாகவே நினைப்பதும்!

6. விஜயபாரதத்திற்கு முன்பே 2018இல் இதுபற்றி "வேட்டொலி" என்ற வலைப்பூவில் ஒருவர் எழுதி யிருந்தார். மெல்ல மெல்ல ஒரு பொய்யை விதைத்து, அதையே திரும்பத் திரும்பச் சொல்லி, பிறகு அந்தப் பொய்யையே செய்தி ஆதாரமாக்குவதுதான் எப்போ தும் அவர்களின் பாணி. அதேதோன் இங்கும் நடந்து உள்ளது.

7. சரி, இனி உண்மையை உணர்வோம்.

“தஞ்சை, கடலூர், கரூர் என்று பெரியார் பல்லக்கு பவனி வந்தாரா?”

“ஆம். முத்துப் பல்லக்கில் பவனி வந்தார்.”

“பிறகென்ன அவர்கள் சொல்வது சரிதானே!”

“தவறு! தெரிந்தே கூறப்படும் பொய்!”

ஏனெனில், தஞ்சையின் தனிச்சிறப்பு மிக்க முத்துப் பல்லக்கு என்று குறிப்பிடப்பட்டிருப்பது மனிதர்கள் சுமந்து வருவதல்ல. சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் இழுத்துவருவதும் முத்துப் பல்லக்கு என்று அழைக்கப்படுகிறது. 

இன்றும் முத்துப் பல்லக்கு என்ற பெயரில் நடக்கும் விழாக்களின் ஒளிப்படங்கள் இதோ: 

தஞ்சை முத்துப் பல்லக்கு ஊர்வலம்

வடமதுரையில் முத்துப் பல்லக்கு ஊர்வலம்

நாகையில் முத்துப் பல்லக்கு ஊர்வலம்

ஆக, முத்துப் பல்லக்கு ஊர்வலம் என்பது அலங் கரிக்கப்பட்ட ஒரு வாகனம் அல்லது பல்லக்கையும் சேர்த்து தூக்கி வரும் வாகனம்.

இப்படி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் அழைத்துவரப் பட்டனர்.

மாநாட்டுப் பேரணிகளிலும், மாநாட்டுத் தலைவரை வரவேற்பதற்காக நடத்தப்படும் பேரணிகளிலும் இத்தகைய அலங்கார வண்டிகள் அணிவகுத்திருக் கின்றன..

பல நூறு ஊர்களில் தந்தை பெரியாருக்கு இத்த கைய வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு ஸ்பெஷல் மாநாட்டில், அண்ணாவை அமரவைத்து சாரட் வண்டியின் முன் நடந்து வந்தார் பெரியார்.

திருச்சி பெரியார் சிலை திறப்பு விழாவில் அய்யா வும், முதலமைச்சர் அண்ணாவும் இணைந்து ஊர் வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்தனர். இப்படி வடபுலத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடுகளும் நம் இயக்க வரலாற்றில் உண்டு. 

திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாடு குடந்தையில் நடந்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சாரட் வண்டியில் அழைத்து வரப்பெற்றார்.

அப்போதும் சாரட் வண்டியின் சக்கரம் தெரியாமல் மறைத்து, படத்தினை வெளியிட்டு, ஆசிரியர் பல்லக் கில் போனது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க முனைந்து, அம்பலப்பட்டும் போனார்கள் இந்துத்து வாவினர். 

கண்ணுக்கு முன்னால் பல்லாயிரம் படங்களும், காணொலிகளும், நேரலையும் இருந்த 2018-லேயே அவ்வளவு தூரம் புளுகு மூட்டையை அவிழ்த்தவர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக உள்ள செய்தியை வைத்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?

பல்லக்கு என்று எழுதியிருப்பதால், அது பல்லக் காகிவிடுமா? ரத யாத்திரை என்று நாடு முழுக்க ரத்த யாத்திர நடத்தினார்களே... ஏழு குதிரை பூட்டிய ரதத்திலா போனார்கள்?

முத்துப்பல்லக்கு என்றால் என்ன என்று நாளெல் லாம் கோயிலை வைத்தே பிழைப்பு நடத்தும் இவர் களுக்குத் தெரியாதா?

மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு பவனி வேண்டாம் என்று சொன்னால், அதற்கு நேர்மை யான பதில் இல்லாத காரணத்தால் தான் இத்தகைய பொய், கட்டுக்கதைகள் எல்லாம்!

இந்தப் பதிலும் அவர்கள் திருந்திக் கொள்வார்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் பொய் என்றே தெரிந்து பரப்புபவர்கள். அதற்கென்றே கம்பெனி நடத்துப வர்கள். 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn