இந்தியாவில் மாட்டைவிட மனிதனைச் சாகடிப்பது எளிது மதம் வழங்கும் கொடுமையான அறிவுரை - கார்ல் மார்க்ஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

இந்தியாவில் மாட்டைவிட மனிதனைச் சாகடிப்பது எளிது மதம் வழங்கும் கொடுமையான அறிவுரை - கார்ல் மார்க்ஸ்

 பேராசிரியர் மு.நாகநாதன்

“விவசாயிகள் பட்டினியால் வாடும் போது, அவனுடைய மாடுகள் நன்றாக வாழ்கின்றன. நாட்டில் மழை மீண்டும் மீண்டும் பெய்தது.கால்நடைகளின் உணவு பெருமளவில் இருந்தது.

கொழுத்த மாடுகள் ஒரு புறமிருக்க, இந்து விவசாயி பசியால் இறந்து போவான். உழைக் கும் கால்நடைகள் பாதுகாப்புடன் உள்ளன.அவை விவசாயத்திற்கு வலிமையையும் எதிர்கால வாழ்க்கை மற்றும் வருமானத்திற்கு ஆதாரங்களையும் பெற்றுத் தருகிறது.

இத்தகைய சூழலில், தனிமனிதனுக்கு மதம் வழங்கும் அறிவுரை கொடுமையானது. சமுதா யத்தைப் பிற்போக்குத்தனமாக மாற்றுகிறது. இந்தியாவில் ஒரு மாட்டைவிட மனிதனைச் சாகடிப்பது - எளிது. இதைச் சொல்வதற்கே கொடுமையானது என்றாலும் சொல்லியாக வேண்டும்." 

(While the peasant farmer starves, his cattle thrive. Repeated showers had fallen in the country, and the forage was abundant. The Hindoo peasant will perish by hunger besides a fat bullock. The prescriptions of superstition, which appear cruel to the individual, are conservative for the community; and the preservation of the labouring cattle secures the power of cultivation,and the sources of future life and wealth.It may sound harsh and sad to say so, but in India it is more easy to replace a man than an OX. -Das Capital Volume II. -chapter X11, page 142)  என மார்க்ஸ்  குறிப்பிட்டார்.

இன்றைய பா.ஜ.க. வின் மதவாத அரசி யலை நுண்ணிய அறிவோடு கணித்துள்ளாரே  பேரறிஞர் மார்க்ஸ்.

இன்று நடைபெறுவது என்ன?

21ஆம் நூற்றாண்டில்  தகவல் தொழில்நுட்ப புரட்சி ஓங்கி வளர்ந்து வரும் நிலையில் மருத்துவ அறிவியல் உச்சத்தைத் தொடும் காலத்தில்  அதன் பயனை நாடே கண்டு உணர்ந்து வரும் வேளையில் கோமியம் நோய்களைத் தீர்க்கும் மருந்து எனக் கூறி உ.பி. பா.ஜ.க. முதல்வர் உட்படப் பல சங்கிகள் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதும், மாட்டு மாமிசம் உண்பவர்களைக் கொல்வதும் எத்தகைய கொடிய செயல்!

இதைத்தான் மாபெரும் அறிஞர் மார்க்ஸ் கொடுமை என்றார்.

மூலதனம் நூலை மொழியாக்கம் செய்த எனது மாமனார் க.ரா.ஜமதக்னி  ஒரு விளக் கத்தையும் அளித்துள்ளார்.

சமஸ்கிருத மொழி யைக் கற்றுத் தெளிந்து  கவிஞர் காளி தாசரின்  ரகுவம்சம், மேகசந்தேசம் ஆகிய நூல்களை சமஸ் கிருத மொழியிலிருந்து தமிழில் கொண்டு வந் தவர். எனவே, மூலதனம் இரண்டாவது தொகுதியில் மனுதர்மம் குறிப் பிட்ட கருத்துகளை இணைத் துள்ளார்.

மனுதர்ம சாஸ்திரம் இயல் 10, 62 சுலோகத் தில் கூறியுள்ளதை ஒப்பிட்டு நோக்குக!

எதிர் நன்றி; பயன் கருதாமல் ‌ஒரு பார்ப் பானையும், பசுவையும் பாதுகாப்பதில் உயிர் விடுவாராகில் இந்த இழிகுலத்தோரை விட விண்ணுலக இன்பம் துய்ப்பார்கள். பார்ப்பான், பசு இறந்தால் பதிலுக்கு வைத்தல் அரிது. இழி குலத்தவன் இறந்தால் அவனுக்குப் பதிலாகப் பலரையும் வைக்க முடியும். மனு நூற்படி பார்ப்பான் உயர் குலத்தோன் மற்றவர் இழி குலத்தோர்.

(மூலதனம் இரண்டாவது 

தொகுதி பக்கம் 318)

இப்போது தெரிகிறதா மோடி ஆட்சி யாருடைய ஆட்சி என்பது.

இதனால் தான் அண்ணல் அம்பேத்கர் மனுதர்மம்  நீட்சே வின் பாசிசக் கோட்பாட்டை விடக் கொடியது என்றார். எத்தனை காலம் ஏமாற்றுவார்கள் மக்களை!

ஏமாந்தது போதும் என மக்கள் உணர்ந்து விட்டார்கள். இந்த மதவெறி அரசியலை வீழ்த்துவதற்கு மானுட நெறிகள் ஓங்குவதற்கு அரசியல் கட்சிகள் அணி திரள வேண்டும் அல்லவா!

அதுதானே முதல் ஜனநாயக கடமை.

No comments:

Post a Comment