ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

ஒற்றைப் பத்தி

முள்ளி வாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் நினைவையொட்டி தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை ரொம்பத்தான் உருகுகிறார். ஈழத் தமிழர்களுக்கான போராளிகள் என்று கருதப் பட்டவர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருந்தோர் - இப்போது எல்லாம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்துடன் கைகுலுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

பிஜேபி ஆட்சிக் காலத்தில் - இலங்கையில் விடுதலைப்புலிகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடிய கால கட்டத்தில் இவர்கள் எந்தப் பக்கம் நின்றார்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நினைப்புப் போலும்.

இப்பொழுது இலங் கைக்குப் பிரதமராக அவசர கதியில் நாற்காலி யில் அமர்ந்துள்ள ரனில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த அந்த காலத்தில்,  இந்திய பிரதமராக  இருந்த வாஜ்பேயி விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரில் எப்படி எல்லாம் உதவினார் என்பது மறந்து போய் விட்டதா?

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி மரணம் அடைந்த போது - அப்பொழுது இலங்கையின் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கே இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் எழுதியது என்ன தெரியுமா?

"இலங்கையின் பிரத மராக நான் இருந்த சமயம் விடுதலைப்புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அப்போது இலங்கையின் பொரு ளாதாரம் மிகவும் பல கீனமாக இருந்தது. எனினும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட் டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட இராணுவப் பயிற்சி அளிக்கவும், வாஜ்பேயி மிகவும் உதவிகரமாக இருந்தார்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை இலங்கை  இராணுவத்தால் கட்டுப் படுத்த முடிந்ததற்கு பிரதமர் வாஜ்பேயி செய்த உதவிகளே முக்கிய கார ணம். அதனால் அவருடன் எனது நட்பு தொடர்ந்து நீடித்தது. அவரது தனிப்பட்ட செல்போன் எண்ணை எனக்கு அளித்ததால் அவ ருடனான நட்பு தொடர்ந்து நீடித்தது" என்று பதிவு செய்தார்  - என்றால் இதன் பொருள் என்ன?

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு போரிட்ட விடுதலைப்புலிகளை ஒடுக் குவதற்கு உதவிக்கரம் நீட்டிய வாஜ்பேயி கட்சியைச் சேர்ந்தவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நெக்குருகிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதனை நாம் நம்ப வேண்டுமாம். அப்படித்தானே!

-  மயிலாடன்


No comments:

Post a Comment