Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் வழியில் மராட்டியம்
May 26, 2022 • Viduthalai

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ள கைம்பெண் திருமணம் குறித்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில ஏடு (13.5.2022) வெளியிட் டுள்ள செய்தியில் "தமிழ்நாட்டில் தந்தைபெரியார் 100 ஆண்டுகளுக்குமுன்னர் என்ன செய்தாரோ அது இன்று மராட்டிய மாநிலத்தில் நடைபெற் றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட தங்கை மகள் 7 வயது முத்தம்மாவுக்கு 12 வயது மண மகனைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவன் திடீரென அம்மை நோயால் இறந்து போனான். அப்போது முத்தம்மாவுக்கு 9 வயது. அவளுக்கு விதவைச் சடங்குகள் செய்தார்கள். செய்தி அறிந்த பெரியார் அந்த வீட்டுக்குப் போனார். முத்தம்மா அவரது காலைக் கட்டிக் கொண்டு அழுதாள். அப்போதே பெரியார் மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனது. அவளை சிதம் பரம் கோவிலைப் பார்க்கப் போவதாகச் சொல்லி அனுப்பி வைத்தார். ஒரு மணமகனை ஏற்பாடு செய்து, தன் நண்பர்கள்  மூலமாக சிதம்பரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார். 

அந்த மணமக்களை தொடரியில் ஈரோட் டுக்கு வரவழைத்து, ஈரோடு தொடரி நிலையத்தில் இருந்து மேளதாளங்கள் ஏற்பாடு செய்து திரு மண ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்தார். உறவினர்கள் கொதித்துப் போய் அவரை ஜாதியில் இருந்து நீக்கினார்கள். அவருக்கு யாரும் தண்ணீரும் நெருப்பும் கொடுக்கக் கூடாது. எந்தச் சடங்குக்கும் அவரை அழைக்கக் கூடாது என ஒதுக்கி வைத்தார்கள். 

1919 ஆம் ஆண்டு, பெரியார் ஈரோடு நகர் மன்றத் தலைவர் ஆகிவிட்டார்.  அதன்பிறகே அவரை ஜாதியில் மீண்டும் சேர்த்துக் கொண் டார்கள். பெரியார் கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததைக் கேள்விப்பட்ட ஒரு பார்ப் பனப் கைம்பெண், தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்ணுக்கு, அவரது ஜாதியிலேயே ஒரு மணமகனைத் தேடி, திருமணம் செய்து வைத்து வரலாறு படைத்தார் பெரியார். 

அதன்பிறகு, தந்தை பெரியாரின்  பரப்புரை களின் விளைவாக, தமிழ்நாட்டில் கைம் பெண்கள் மறுவாழ்வு பெறத் தொடங்கினர். இது தமிழ்நாட்டில் நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட் டத்தில், ஹெர்வட் (Herwad) என்ற கிராமத்தில், இனி கணவன் இறந்தால், பெண்களின் நெற்றிப் பொட்டை அழிக்கக்கூடாது, வளையல்களை உடைக்கக் கூடாது, வெள்ளைச் சேலை கட்டக் கூடாது என, கிராமசபை தீர்மானம் நிறை வேற்றியது. அதேபோல, மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும் என, மராட்டிய அரசு ஆணை பிறப்பித்தது. மராட்டியத்தின் கிழக்கே விதர்பா பகுதியில் முதன்முதலாக, பல கிராமங் கள் அந்த வழியில் தீர்மானம் நிறைவேற்றி வரு கின்றன. 

வாசிம் மாவட்டத்தில், மாலேகான் வட்டத்தில் தோர்கேடா என்ற கிராமம், (விதர்பாவில்) இந்த வழக்கத்தை ஒழித்த முதல் கிராமம் என்ற பெயரைப் பெற்றது.

தகவல்: தோழர் அருணகிரி


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn