நாட்டை மோசமான நிலைக்கு பா.ஜ.க. கொண்டு சென்று விட்டது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தாக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

நாட்டை மோசமான நிலைக்கு பா.ஜ.க. கொண்டு சென்று விட்டது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை, மே 16 நாட்டை மிக மோசமான நிலைக்கு பா.ஜ.க. கொண்டு சென்று விட்டது. சிவசேனா கட்சியான நாம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராட்டிரா மாநிலம் மும்பை யில் ஆளும் சிவசேனா கட்சியின்  மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட் டில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர், மாநாட்டில் கலந்து கொண்ட மகாராட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது சிறப்புரையில் பாஜக மீது கடும் தாக்குதல் நடத்தினார்.

மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல மைச்சர் உத்தவ் தாக்கரே, “தற்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளியை அரசு தேடி கொண்டி ருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல, அமைச்சராகவும் மாற்றிவிடுவார்கள்" என்றும் விமர்சித்தார். 

மேலும் பேசுகையில், “சிலிண்டர் விலை விண்ணை முட்டும் வகையில் இருந்தால், பிரதமர் மோடி கொடுத்த ரேசன் பொருட்களை எப்படி சமைத்து சாப்பிட முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார். 

முன்னதாக இந்த வார தொடக் கத்தில் தாவூத் கூட்டாளிகளுக்கு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியது தேசிய பாதுகாப்பு முகமை. இதற்காக நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு டையவர்கள் என கருதப்படும் பலருக்கு சொந்தமான இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனை நடத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்திலே பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த சோதனைகள் கடந்த திங்கட்கிழமையன்று நடை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உள்ளிட்ட பலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட் டதாக குவிந்த புகார்களின் அடிப் படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவில் யாரும் இப்போது ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசுவது இல்லை. சிவசேனா கட்சி யான நாம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்.

  நாட்டைமிக மோசமான நிலைக்கு பா.ஜ.க. கொண்டு சென்றுவிட்டது. மத்திய அமைப்புகளைப் பயன்படுத்திப்  பொய் வழக்குகளைப் பதிந்து மராட்டிய மக்களைத் தொந்தரவு செய்தால் அமைதி காக்க மாட்டோம், என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.


No comments:

Post a Comment