தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முத்தமிழறிஞர் கலைஞர் திருத்தியது செல்லும்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முத்தமிழறிஞர் கலைஞர் திருத்தியது செல்லும்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜன.24 தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முத்தமிழறிஞர் கலைஞர் திருத்தம் செய்தது செல்லும் என்றும், அத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்தும் அரசு பிளீடர் பி.முத்துகுமார் வாதத்தையடுத்து சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதிய நீராரும் கடலுடுத்த... எனத் தொடங்கும் பாடலின் இரண் டாவது பத்தியில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துலு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கொண்ட வரிகளை நீக்கி, கடந்த 1970ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த் துப் பாடலாக அறிவித்தார்.

அதன்படி, அப்போது முதல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. மனோன் மணியம் சுந்தரனார் எழுதிய முழுமை யான பாடலை திருத்தியதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007-இல் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் சமஸ்கிருதம்போல் அல்லாமல் இளமையாக தமிழ் மொழி இருப்பதை குறிப்பிடும் வகையிலும், பிற திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது மனோன் மணியம் சுந்தரனாரருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

எனவே திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடு வதையும் சட்டவிரோதமானது எனவும் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜ ராகி தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ள தாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து 1970-இல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் மனோன்மணியம் சுந்தரனார் பாடலில் திருத்தம் செய்தது செல்லும் என்றும் நீதிபதிகள் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள் ளனர்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு

ஏற்கெனவே முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப் படி தமிழ்நாடு அரசின் மாநிலத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக ஒலிக்கும் என்று அறிவித்ததுடன், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment