தமிழ் மரபு மாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

தமிழ் மரபு மாதம்

 ஆஸ்திரேலிய அரசு கடந்த ஆண்டு தமிழர் புத்தாண்டாம் தை முதல்நாளை தமிழ் மரபு மாதம் என்று அறிவித்தது, இதனை பெருமைப் படுத்தும் விதமாக பொங்கல் பொங்கும் பானை, கரும்போடு தமிழர்களின் சின்னமான பனை, வில், அம்பு, சடுகுடு ஆட்டம், சிலம்பம், சிலம்போடு கோபத்துடன் நிற்கும் கண்ணகி, மேளத்தோடு ஊதல், முரசு ஒயிலாட்டம், கோலாட்டம், பறையிசை, கரகாட்டம், ஏர் உழவன் பின்னணியில் உதயசூரியன், மற்றும் கட்டடக்கலைக்குப் பெயர்போன தஞ்சை பெரிய கோவில் முன்வளாகமண்டபத்தோடு கோவில் கோபுரத்தை முழுமையாக பதித்து பெருமைப்படுத்தி உள்ளனர்

அதோடு ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் ஆயுதமான பூமாரங்கையும் தனியாக அச்சிட்டுள்ளனர்.  இதன் மூலம் இந்து மா பெருங்கடலில் உள்ள தீவுகளில் வாழும் மக்கள் திராவிடக் குடிகள் என்பதை குறிப்பால் உணர்த்தி உள்ளனர்.

No comments:

Post a Comment