இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் நம் தமிழ் வீரர்கள் வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் நம் தமிழ் வீரர்கள் வரலாறு

ஒன்றிய அரசுதான் அறிவித்தது, இந்த ஆண்டு அலங்கார ஊர்தியில் இந்திய விடுதலைக்குப் பங்காற்றியவர்களை காட்சிப்படுத்துங்கள் என்று. அதனடிப்படையில் இதுவரை ஜான்சிராணியையே முன்னிலைப் படுத்திகொண்டு இருந்தவர்கள் மத்தியில் அதற்கு முன்பே வெள்ளையரை தோற்கடித்து ஆட்சி புரிந்த வேலூநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டிய ..சி. உள்ளிட்டவர்களை காட்சிப் படுத்த முடிவு செய்து செப்டம்பர் 2021 இல் தேர்வுக்குழுவின் முன்பு காட்சிப்படுத்தியது தமிழ்நாடு அரசு, ஆனால் அவர்கள் மாற்றம் செய்யச் சொன்னார்கள். அதேபோல் தொடர்ந்து மூன்று முறை திருத்தங்களைச் செய்து தமிழ்நாடு அரசு காட்சிப்படுத்தியது, கடைசியாக பாரதியாரை வைக்கலாமே என்றனர். அவரையும் வைத்தாகி விட்டது,

இந்தப் பெண் யார்?

 மீண்டும் அவர்கள்வேலு நாச்சியார்படத்தைப் பார்த்து இந்த பெண் யார்?

ஜான்சி ராணியை தமிழ்நாடு வாகனத்தில் ஏன் வைத்திருக் கின்றீர்கள்? என்றார்கள்.

அதற்கு தமிழ்நாட்டுக் குழு வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண் வேலு நாச்சியார் என்று பதில் கூறினார்கள்.

வேலுநாச்சியார் வெள்ளையனை எதிர்த்துப் போர் புரிய மைசூர் மகாராஜா ஹைதர் அலி தன் மகன் திப்பு சுல்தான் தலைமையில் 5,000 குதிரைப் படையையும், 5,000 காலாட் படையையும் அனுப்பியவரலாற்றைப் படித்தார்கள்

 இதுவரை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதிரை மீது அமர்ந்து வாளேந்தி போர்க்களத்தில் வெள்ளையர்களிடம் தோல்வியடைந்த ஜான்சி ராணியைத்தான் அவர்கள் முன்னிலைப்படுத்தி இருந்தனர். ஆனால் அவருக்கு முன்பே வெள்ளையருக்கு எதிராக படைதிரட்டி வெள்ளையர்களை ஓட ஓடவிரட்டிய வீரமங்கை வேலு நாச்சியார் என்பது அவர்களின் மனதை உறுத்தியுள்ளது

 மருது சகோதரர்களின் வரலாறு

இவர்கள் வேலுநாச்சியாருக்கு தளபதியாக நின்று சிவகங்கையை   மீட்டெடுத்தனர். வீரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தவர்கள்.

 இவர்கள் ஆற்காடு நவாப், புதுக்கோட்டை தொண்டைமான் படைகளோடு வந்த வெள்ளையர்களை வீழ்த்தியது வரலாறு.

மருது சகோதரர்களை கைதுசெய்து வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை காட்டிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகக் கூறிய போதும் முடியாது என்று கூறி ஆங்கிலேயர் பிடியில் இருந்து  தப்பி  கேரளம், மைசூர் பகுதி மன்னர்களை இணைத்து வெள்ளையர்களை எதிர்த்து 15 ஆண்டுகள் போரிட்டு மடிந்த வரலாறு - சொல்லப்பட வரலாற்றைக் கேட்ட தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் மனக்குமுறலில் இருந்தனர்.

காரணம் அனைவருமே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

..சிதம்பரனார் என்ற ..சி.  வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு நட்டம் ஏற்படுத்தினார். இதைக் கேட்ட தேர்வுக் குழுவினர் ..சி. யைபிஸ்னஸ் மேன்என்று கூறி நையாண்டி செய்துள்ளனர்.

ஆனால் அவர் கூறியதற்கும் மேலதிகத் தகவல்களாக,.

பாரதியாருக்கு நிதி உதவி செய்து விடுதலைப் போராட்ட கவிதைகள் எழுதச் சொன்ன செல்வச் சீமான்.

இந்தியாவில் பொதுவுடைமை தத்துவம் வரும் முன்பே... பஞ்சாலைகளில் தொழிற்சங்கம் நிறுவியவர்.

தேர்ந்த வழக்குரைஞர்

செக்கிழுத்த செம்மல்,

தன் வாழ்நாளில் வெள்ளையனுக்கு எதிராக போராடி, செல்வம் இழந்து, மடிந்த மாவீரன்.

திலகரோடு இணைந்து தீவிரமான காங்கிரஸ்காரராக உலாவந்த போராளி என்ற உண்மைகளை அறிந்ததும்.தேர்வுக்குழுவினர் மனதில் பொறாமை எண்ணம் மேலோங்கியது.

நிச்சயமாக இந்த வாகனத்தை அனுமதித்தால் - தங்களது மனுதர்மத் தையே விதியாக கொண்டுவந்து, பார்ப்பனர்களுக்கு கல்வி கற்க தங்கக்காசு களை தானமாக தந்த ஜான்சிராணியின் புகழ் இரண்டாமிடத்திற்கு சென்று விடுமே, இதனால் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையே திருத்தி எழுத வேண்டிய தேவை ஏற்படுமே!

இந்த அச்சம் தான் காரணம் .

இதோ இந்த வீர வேங்கைகள் தமிழ்நாடு முழுவதும் பவனி வரப்போகிறார்கள்..

கண்காட்சிகள் நடக்கப் போகிறது... தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்த வரலாறு பரவப் போகிறது, இதன் மூலம் இந்தியா எங்கும் இவர்களின் புகழ்பரவும்.

No comments:

Post a Comment