மிக மிக ஆபத்தான முன்னுதாரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

மிக மிக ஆபத்தான முன்னுதாரணம்

டெரெக் பிரியன்

கோவிட் - 19 நோய்த் தொற்று கடுமையாக இருக்கிறதோ இல்லையோ, நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் நாள் குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கி, ஒன்றிய அரசின்  வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பாரம்பரியமாகவே ஒன்றிய அரசின்  வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை பிப்ரவரி மாத இறுதி நாளன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். என்றாலும் 2017 ஆம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த வழக்கத்தை மாற்றிவிட்டார். வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதை நான்கு வாரங்களுக்கு முன்பாக  பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்வதாக மாற்றப்பட்டது. மோடி அரசின் கீழ் இது போன்ற தேவையற்ற மாற்றங்கள் ரயில்வே துறை வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையிலும் மேற் கொள்ளப்பட்டன. 2016 ஆம் ஆண்டு வரை  ஒன்றிய அரசின் பொது வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு  ஒரு சில நாட்களுக்கு முன்னதாக ரயில்வே துறை வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் மவுனமான ஆட்சேபனைகளுடன் 2017ஆம் ஆண்டில் ரயில்வே துறையின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கை ஒன்றிய அரசின் பொது வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையின் ஒரு பகுதியாக அதனுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் 92 ஆண்டு பழைமையான நடைமுறை முடிவுக்கு வந்தது. அது முதற்கொண்டு ரயில்வே துறையின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கைமீது நாடாளுமன்றத்தின் பரிசீலனை இல்லாமலேயே போய்விட்டது.  மக்கள வையையும், மாநிலங்கள் அவையையும் மோடி அரசு கேலி செய்வதற்கான பல எடுத்துக் காட்டுகளுள் இதுவும் ஒன்று.  நாடாளுமன்றத்தின் பரிசீலனை இன்றி சட்டம் இயற்றுவதற்கான ஒரு உச்சக் கட்ட முன்னோட்டமாக அமைந்தது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட  விவசாய கொடுங்கோல் சட்டங்கள்தான்.

அரசின் வரவு செலவுத் திட்ட நிதி அறிக்கையை ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்தல்

ஒன்றிய அரசின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில் மக்கள் நல திட்டங்கள் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதும், ரயில்வே துறையின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை ஒரே ஒரு அமைச்சகத்தை மய்யமாகக் கொண்டது என்பதும் அனைத்து மக்களும் நன்றாக அறிந்திருக்கும் செய்திகள்தான். கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஒரு முறையும், ஒரு முறைக்கு மேற் பட்டும், தாங்கள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணமே சற்றும் இல்லாத பா... ஒன்றிய அரசு, ரயில்வே துறை அறிக்கை உள்ளிட்ட மொத்த ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையுடன் இணைத்து, தேர்தலுக்கு முன்னதாக  தாக்கல் செய்துள்ளது. பா...வின் தேர்தல் செயல் திட்டக் கருவியாக ஒன்றிய அரசின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கை பயன் படுத்திக் கொள்ளப்பட்டது. பஞ்சாப், கோவா மாநிலங் களில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு 3  நாட்களுக்கு முன்பாகவும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடை பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவும் ஒன்றிய அரசின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்களும் அப் போது நடைபெற இருந்தன. மாதிரி தேர்தல் நன் னடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கெ னவே அறிவிக்கப்பட்டு விட்டது.  அதன் மூலம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டிய தேர்தல் ஆணை யம்,  தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு செல்வாக்கு செலுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் மாதிரி தேர்தல் நடத்தை விதிகளுக்கு சிறிதும் மரியாதையை மோடி அரசு காட்டவில்லை என்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட் டின் பொருளாதார நிலை முடமாக்கப்பட்ட நிலையில் வரிச் சலுகைகள், மானியங்கள் ஒன்றிய அரசின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறுகிய தேர்தல் ஆதாயத்துக்காக வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை பா... அரசால் பயன்படுத்திக் கொள்ளப் படும் என்று அரசுக்கு எதிரான  சந்தேகங்கள்  அரசின் விமர்சகர்களால் எழுப்பப்பட்டன. பிப்ரவரி 1 ஆம் தேதி ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 16 அரசியல் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. ஆனால் அவர்களது கருத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை நாடு முழுவ தற்கும் பொதுவானது என்ற காரணம் கூறி, வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பா..., நிதி யாண்டு தொடக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியன்று பல்வேறு பட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்து கொள்ளப்படும் என்று கூறி வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை ஒன்றிய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று  தாக்கல் செய்தது. அது போலவே 2019 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்னதா கவே பா... ஒன்றிய அரசு ஓர் இடைக்கால வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய் தது. அதில் 2030ஆம் ஆண்டு பற்றிய ஒரு கனவுக் கண்ணோட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே,  தேசிய நெடுஞ் சாலைகள் மேம்பாட்டுக்கும், மாநில நெடுஞ்சாலைகளின் மேம் பாட்டுக்காகவும், 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீட்டினை ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்தார். இது போன்ற நிதி ஒதுக்கீ டுகள் கேரள மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு செய் யப்பட்ட போதிலும், அம்மாநில மக்கள் பா..கட்சியின் பொய்ப் பிரசாரத்தைத் தோற்கடித்தனர்.

2012 ஆம் ஆண்டில் கற்றுக் கொண்டதொரு பாடம்

ஒன்றிய அரசின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது தேர்தல்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இதற்கு முன்பும் நடந் துள்ளன.  எடுத்துக்காட்டாக 2012 ஆம் ஆண்டில்,  பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் போது,  தாக்கல் செய்யப்படும்  ஒன்றிய அரசின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையின் மூலம் அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆதாயம் பெறுவதற் கான  வாய்ப்பு இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜேட்லி வலியுறுத்தி யதையடுத்து, ஒன்றிய அரசின் பொது வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வது மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களின் சேர்க்கைக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்த ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்  அர்ஜூன் சிங்குக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. அது அய்ந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சியாகும். அதெல்லாம் பழைய காலம். கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்ட பல நிகழ்ச்சிகளைப் பற்றி அடிக்கடி நான் விவரித்துள்ளேன்.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று அய்ந்து சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் தேர்தல் ஆணையத்தால் அறி விக்கப்பட் டது. ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையை ஒன்றிய அரசு பிப்ரவரி 1ஆம் தேதியன்று தாக்கல் செய்யும். இந்த மாநிலங் களிலும் இதே வழக்கத்தை தங்களுக்கு சாதகமாக பா... ஒன்றிய அரசு பயன்படுத்தாது என்று கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.   எந்த மாநிலத்தின் பிரதிநிதியாக ரயில்வே துறை அமைச்சர் இருக்கிறாரோ, அந்த மாநிலத்துக்கு புதிய திட்டங்கள் அறிவித்ததற்காக முந்தைய ரயில்வே துறை அமைச் சர்கள் பல நேரங்களில் கண்டிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே துறையின் வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கை எப்போது ஒன்றிய அரசின் பொது வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையுடன் சேர்க்கப் பட்டுவிட்டதோ, ரயில்வே துறை அமைச்சர் அரசியல் செய்வது முடிவுக்கு வந்து விட்டது என்று பா... தெரிவித்துள்ளது. ஆனால் இது நடைபெறவில்லை. கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஒன்றிய ரயில்வே துறை வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையில்,  பா... அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும்   பா... ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

2012-ஆம் ஆண்டு நிகழ்வு ஒன்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட பா..கவின் மோடி. அரசு, மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட பிறகு, தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின்  வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையை செயல் படுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கவும் செய்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தின் மீதோ, அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்கள் மீதோ பா.. கட்சிக்கு சிறிதளவு மரியாதை கூட இல்லை.

நன்றி: 'தி இந்து' 20-01-2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment