டிப்ளமோ முடித்தவருக்கு பணி வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 24, 2021

டிப்ளமோ முடித்தவருக்கு பணி வாய்ப்பு

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 'போர்மேன் (மைனிங்) பதவியில் 16 ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி : மைனிங், மைன் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இப்பிரிவில் குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது : 15.12.2021 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Gen. Manager (Inst./Pers. & IRs./CP)

Uranium Corporation of India Limited,

(A Government of India Enterprise) P.O.

Jaduguda Mines, Distt.- Singhbhum East,

JHARKHAND-832 102

கடைசிநாள் : 15.12.2021

விபரங்களுக்கு: www.ucil.gov.in

ஒன்றிய அரசில்

காலிப் பணியிடங்கள்

ஒன்றிய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் டாடா நினைவு மருத்துவமனையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : நிர்வாக அதிகாரி 8, அக்கவுண்ட்ஸ் 2, அசிஸ்டென்ட் அக்கவுன்ட் ஆபிசர் 3, பர்சேஸ் ஸ்டோர் 1, அசிஸ்டென்ட் 12, லோயர் டிவிசன் கிளார்க் 40, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் 8, கிச்சன் சூப்பர்வைசர் 6, குக் 12 உட்பட மொத்தம் 95 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 7.12.2021

விவரங்களுக்கு : https://tmc.gov.in

காற்றாலை மின்சார நிறுவனத்தில் பணியிடங்கள் 

சென்னையில் உள்ள தேசிய காற்றாலை மின்சார நிறுவனத்தில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: புராஜக்ட் அசிஸ்டென்ட் 6, புராஜக்ட் இன்ஜினியர் 3, புராஜக்ட் கோ ஆர்டினேட்டர் 1, நிர்வாக அதிகாரி 1, அக்கவுன்ட்ஸ் 1, பர்சேஸ் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : புராஜக்ட் அசிஸ்டென்ட், இன்ஜினியர் 30, கோ ஆர்டினேட்டர் 50, நிர்வாக அதிகாரி, அக்கவுன்ட்ஸ், பர்சேஸ் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 26.11.2021 மாலை 5 மணி.

விவரங்களுக்கு: https://niwe.res.in/careers_advt8&9.php

No comments:

Post a Comment