எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச வெற்றியைக்கூட அ.தி.மு.க.வுக்கு மக்கள் தரவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச வெற்றியைக்கூட அ.தி.மு.க.வுக்கு மக்கள் தரவில்லை

முதலமைச்சர் மு.. ஸ்டாலின் கடிதம்

சென்னை, அக்.15 எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியைக் கூட அதிமுகவுக்கு தருவதற்கு மக்கள் முன்வரவில்லை என, முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் மு. ஸ்டாலின் நேற்று (14.10.2021) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

தமிழ்நாடு மக்கள் தங்களின் நலன் காக்கும் நம்பிக்கை இயக்கமான தி.மு..வின் மீது பாசமும் பற்றும் கொண்டு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடே வியக்கும் மகத்தான வெற்றியையும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய பெருமிதமிக்க வெற்றியையும் வழங்கியதைப் போலவே, 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்த லிலும் வரலாறு போற்றும் மிகப் பெரும் வெற்றியை வழங்கியிருக்கி றார்கள்.

இருள் மண்டிக் கிடந்திருந்த...

10 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் இருள் மண்டிக் கிடந்திருந்த நிலையில், கடந்த .தி.மு.. ஆட்சியின் கடைசிக் கட் டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப் புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட் டது. கிராமப்புறங்களுக்கு மட்டுமான தேர்தல் என்பதால் எப்படியாவது தி.மு..வின் வெற்றியைத் தடுத்துவிட முடியும் என, ஆட்சியதிகாரத்தில் இருந்த அதிமுக போட்ட கணக்கு தப்புக்கணக்காகி, தமிழ்நாடு உள்ளாட் சித் தேர்தல் வரலாற்றில் முதன்முறை யாக, எதிர்க்கட்சியான திமுக 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங் களில் வெற்றி பெற்றது.

பாரபட்சம் காட்டியது...

அதிகாரம் - செல்வாக்கு - பணபலம் - ஆணவம் - அரட்டல் உருட்டல் என, அதிமுகவின் அத்தனை அஸ்திரங் களையும் தொண்டர்களின் கடும் உழைப்பு - மக்களின் பெரும் ஆதரவு எனும் இரு கணைகளால் எதிர்கொண்டு திமுக இந்த வெற்றியைப் பெற்ற நிலையில், திமுக வென்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரங் களையும் பிற வசதிகளையும் வழங்கு வதில் அன்றைய அதிமுக அரசு வேண் டுமென்றே பாரபட்சம் காட்டியது.

எனினும், மக்கள் பணியாற்றுவதில் சளைக்காத திமுகவினர், உள்ளாட்சி அமைப்புகளில் திறம்படப் பணியாற்றி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த நம்பிக்கை, வெற்றியாக விளைந்தது.

உங்களில் ஒருவனான நான்.....

 உங்களில் ஒருவனான இந்தமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தலைமையிலான அரசின் 5 மாத கால ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு மக்கள் மனப்பூர்வமாக வழங்கியுள்ள நற்சான்றிதழ்தான் - பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி.

இது எனது அரசு அல்ல... நமது அரசுஎன்று உங்களில் ஒருவனான நான் சுட்டிக்காட்டி வருவதை மக்கள் முழுமையாக ஏற்று, திமுக அரசின் திட்டங்களால் பயன்பெற்று, அவை எவ்விதத் தொய்வுமின்றித் தொடர வேண்டும் என ஆதரித்து, வாக்களித்து, திமுகவின் மீதான தங்களின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தி உணர்த்தி இருக்கிறார்கள்.

மக்கள் வளர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை தேர்தல் களத்தில் மறக்க முடியாத வெற்றியாக மாற்றிக் காட்டிய சாதனையாளர்கள், நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளான நீங்கள்தான்.

உங்களில் ஒருவனான நான், உள் ளாட்சித் தேர்தல் களத்தில் நேரடியாகப் பரப்புரை செய்ய இயலவில்லை. அதற் குக் காரணம், முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே காத்திருந்த சவால் நிறைந்த கடமை களும், அதன் தொடர்ச்சியான செயல் பாடுகளும்தான்.

202 வாக்குறுதிகளை

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி, மூன்றாவது அலை குறித்த அச்சத்தைப் போக்கி, நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக் குறுதிகளில், 150 நாட்களுக்குள்ளாக 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது நமது அரசு.

நாள்தோறும் திட்டங்கள், துறை தோறும் முழு வீச்சிலான செயல்பாடுகள் எனத் தமிழ்நாட்டின் இருண்ட காலத்தை விரட்டி அடிக்கும் உதய சூரியனாக திமுக ஆட்சி ஒளி வீசுகிறது. அதன் பலனைத் தமிழ்நாடு மக்கள் நேரடியாக உணர்ந்து, பயன்பெறுகிற காரணத்தால்தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

இவ்வாறு மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment