விரைவில் இந்தியா வரும் மினி மின்சாரக் கார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

விரைவில் இந்தியா வரும் மினி மின்சாரக் கார்

மும்பை, அக். 26- மினி இந்தியா நிறுவனம் தனது முதல் மின்சாரக் கார் டீசர் ஒளிப்படத்தை வெளி யிட்டு உள்ளது. மினி நிறுவனத்தின் முதல் மின் சாரக் கார் விரைவில் இந் தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்ன தாக மினி கூப்பர் எஸ்.. மாடல் 2019 வாக்கில் பன்னாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட் டது.

தோற்றத்தில் மினி கூப்பர் எஸ்.. மாடல் அதன் அய்.சி.. மாடலை போன்றே காட்சியளிக் கிறது. எனினும், எஸ்.. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், டூயல் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் உள்ளன.

மினி மின்சாரக் காரில் 32.6 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 181 பி.எச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப் படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி கட்டுப் படுத்தப்பட்டு இருக்கி றது.

No comments:

Post a Comment