திதி - திவசம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

திதி - திவசம்!

 திதி விவரம்:

இந்த ஆண்டுக்கான மஹாளய பட்சம். 21-ஆம் தேதி பிரதமை திதியோடு தொடங்கியது. 28 ஆம் தேதி சப்தமி திதியாகும்.

அதன்பின் வரும் நாட்களில் (மஹா வியதீ பாதம்) 29 ஆம் தேதி மத்யாஷ்டமி, 30 ஆம் தேதி நவமி, அக்டோபர் 1 ஆம் தேதி தசமி, 2 ஆம் தேதி ஏகாதசி, 3 ஆம் தேதி துவாதசி, 4 ஆம் தேதி திரயோதசி, 5 ஆம் தேதி சதுர்த்தசி திதியாகும். 6 ஆம் தேதி மஹாளய அமாவாசை நாளாகும். இந்த நாட்களில் முறைப்படி பித்ரு கடனைச் செய்வோம். அமோகமான வாழ்வைப் பெறுவோம்.

இவையல்லாமல் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை இத்தியாதி, இத்தியாதி!

மஹாளய பட்சத்தில் திதி கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகுமாம்!

முதல்நாள் (பிரதமை): பணம் சேரும்.

இரண்டாம் நாள் (துவிதியை): நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

மூன்றாம் நாள் (திரிதியை): நினைத்தது நிறைவேறும்.

நான்காம் நாள் (சதுர்த்தி): சத்ரு பயம் நீங்கும்.

அய்ந்தாம் நாள் (பஞ்சமி): செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் பெருகும்.

ஆறாம் நாள் (சஷ்டி): புகழும், கீர்த்தியும் உண்டாகும்.

ஏழாம் நாள் (சப்தமி): பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். தலைமைப் பதவி தேடி வரும்.

எட்டாம் நாள் (அஷ்டமி): அறிவாற்றல் கிடைக்கும்.

ஒன்பதாம் நாள் (நவமி): திருமணத் தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.

பத்தாம் நாள் (தசமி): நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.

பதினோராம் நாள் (ஏகாதசி): படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி உண்டாகும்.

பன்னிரண்டாம் நாள் (துவாதசி): விலை உயர்ந்த ஆடை ஆபரணச் சேர்க்கை  உண்டாகும்.

பதின்மூன்றாம் நாள் (திரயோதசி): பசுக்கள் -விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை, தொழில் அமையும்.

பதினான்காம் நாள் (சதுர்த் தசி): ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்கும், எதிர்காலத் தலை முறைக்கு நன்மை கிடைக்கும்.

பதினைந்தாம் நாள் (மஹா ளய அமாவாசை): முன்னோர் ஆசியால் மேற்சொன்ன அனைத்துப் பலன்களும் சித்திக்கும்.

இவையெல்லாம் செய்தால் நம் முன்னோர்களின் ஆசீர் வாதங்களை முழுமையாகப் பெறலாமாம்.

நம் மக்களை முன்னேற் றுவதற்கான வழிகள் - இந்து மதத்தில் சுத்த சுன்னம்தான்.

சதா இந்த வேலைகளை வேளை தவறாமல் செய்து கொண்டு இருந்தால், உண்ண உணவு, உடுக்க உடை - உறையுள் போன்ற வாழ்வின் அடிப்படைத் தேவை என்ற ஆதார சுருதிகளுக்கு வேறு என்ன வழி?

முன்னோர்களுக்கு இவ் வாறாக திதியும், திவசமும் செய்தால் அவர்களின் ஆசீர் வாதம் கிடைக்குமாம். இந்த ஆசீர்வாதங்கள் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது பயன்தருமா?

நமது பிள்ளைகள் பிறந்து முதல் நிலையில் தேறி முதன்மையான உத்தியோ கங்களைப் பெற்று விடுவார்களா?

உயிரோடு இருக்கும்போது பெற்றோர்களைக் கவனிக்காத கசடர்கள் செத்துப் போன பின் சிவலோகம் - வைகுண்டத்திற்கு வழியனுப்பிய நிலையில், அவர்களுக்குப் பொருள்களை அனுப்புகிறார்கள் - அந்த லோகங்கள் எல்லாம் வறுமையில் தாண்டவமாடுகின்றனவா?

இதுபோன்று மூடத்தனத் தையும், சோம்பலையும் பரப்பும் ஏடுகளை அரசு அனு மதிக்கலாமா? வெட்கக்கேடு.

 - மயிலாடன்

No comments:

Post a Comment