பெகாசஸ் விவகாரம்: சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

பெகாசஸ் விவகாரம்: சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, அக்.27  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசா ரித்து வருகிறது. இந்த ரிட் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் கடந்த ஆகஸ்டு 17 ஆம் தேதி உத்தர விட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஒன்றிய  அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குறிப் பிட்ட மென்பொருளை ஒன்றிய  அரசு பயன் படுத்தியதா அல்லது இல்லையா என்பதை பொது விவாதமாக்க முடியாது. நாட்டின் பாது காப்பை கருத்தில்கொண்டு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க ஒன்றிய  அரசு தயாராக உள்ளது. நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும் என வாதிட்டார்.

மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசி குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட விவகாரத்தில் அனைத்துத் தகவல்களையும் நீதிமன்றத்திற்கும், மனுதாரர்களுக்கும் தெரி விக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஒன்றிய  அரசு குழு அமைக்க அனுமதிக்கக் கூடாது. அமைக்கப்படும் குழு ஒன்றிய  அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என வாதிட்டார்.

செயல்பாட்டாளர் ஜெகதீப் சொக்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், பெகாசஸ் மென்பொருளை வெளிநாட்டு அமைப்புகள் பயன்படுத்தியிருந்தால், நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய  அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய  அமைச்சரவைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஒன்றிய  அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என தெரி வித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எவ்வித தகவலையும் ஒன்றிய  அரசு தெரிவிக்க வேண்டியதில்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். இந்த விவகாரத்தில் ஒன்றிய  அரசு சுற்றிவளைத்துப் பேசுவதால் எவ்விதப் பலனுமில்லை.

இந்த ரிட் மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக் கிறோம். இடைக்கால உத்தரவு 2 அல்லது 3 நாள்களுக்குள் பிறப்பிக்கப்படும். அதற்குள் ஒன்றிய  அரசு தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றால் அது குறித்து நீதிமன்றத்தில் முறை யிடலாம் என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இன்று (27.10.2021) காலை வெளியிட் டுள்ளது. அதன்படி 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, “இந் தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கி யம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு நிபுணர் குழுவின் விசார ணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண் காணிக்கும்என்று தெரிவித்தனர்.

இதன்படி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள் ளது. அதில்ரா' பிரிவின் முன்னாள் இயக்குநர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment