‘கமிஷன்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

‘கமிஷன்!'

கேள்வி: திராவிட இயக்கத்தவரும், தனித்தமிழ் பேசுபவர்களும் மோதிக் கொள்கிறார்களே?

பதில்: பிரிவினை பேசுபவர்கள் யாராக இருந்தாலும் குற்றமே. ‘கமிஷன்' பெறுவதில் யாருக்கு முன்னுரிமை என்பதில் பிரச்சினை இருக்கிறது.

- 'விஜயபாரதம்'

(ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 22.10.2021, பக்கம் 35)

இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது. அவர்களுக்கு எதிரானவர்களை முட்டவிட்டு இடையில் இரத்தம் குடிக்கும் ஓநாய் ஆரியப் புத்தி என்பது இதுதான்!

பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன் ஆரியன் என்றால் சீரியன், உயர்ந்தவன் என்றும் ஆவணப்படுத்தும்.

அடிமை, அனுமார்கள் இதனைப் புரிந்துகொள்வார்களா?

ஆரியர்களா? திராவிடர்களா? என்றால், நாங்கள் ஆரியர் பக்கமே என்று கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நாக்கை இரவல் வாங்கி சுழற்றும்சூத்திர' சூ()தர்கள் புரிந்துகொள்வார்களா?

தமிழ் என்றால் அதில் ஓர் ஏகடியம் - நமட்டுச் சிரிப்பு! சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி எக்களிப்பு!

தமிழை நீஷப் பாஷை என்று சொன்னவர்தானே காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

தமிழ் வழிபாட்டு மொழி என்றால், அதிலும்அத்திரி பாட்சா கொழுக்கட்டை!' என்று ஆடித் தீர்ப்பதுதானே ஆரியம்.

தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும்- அருள் இருக்காது' என்றுதுக்ளக்'கில் தலையங்கம் தீட்டிய திரிநூல்தானே திருவாளர் சோ.இராமசாமி. சவுண்டிப் பார்ப்பான்முதல் சங்கராச்சாரி வரை தமிழ் என்றால் அப்படியொரு ஆத்திரம் - அலட்சியம் - இழிவுபடுத்தும் போக்கிரித்தனம்!

திராவிடம் என்றாலும், தமிழர் என்றாலும் அது பிரிவினையாம்!

, சமஸ்கிருதம் என்று சொன்னால்தான்ஒற்றுமை' என்று பொருளா? அதனால்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ சமஸ்கிருதம்! (130 கோடி மக்கள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் சமஸ்கிருதம் பேசுவோர் வெறும் 24,000 பேரே!)

பிறப்பிலேயே பேதம் பேசும் கூட்டம் பிரிவினைபற்றிப் பேசலாமா? திராவிட இயக்கத்தவர்களுக்கும், தனித்தமிழ் பேசுபவர்களுக்கும் இடையே கமிஷன் பெறுவதில் பிரச்சினையாம்.

கோவில்களில் அர்ச்சனை என்ற பெயரில் கமிஷன் வாங்கும் கைபர் கணவாய்க் கூட்டம் எதைத்தான் பேசாது?

 - மயிலாடன் 

No comments:

Post a Comment