நீட் தேர்வு: ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் - நவீன மனுதர்மத் திட்டம்; ஆர்.எஸ்.எஸினுடைய கண்ணிவெடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

நீட் தேர்வு: ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் - நவீன மனுதர்மத் திட்டம்; ஆர்.எஸ்.எஸினுடைய கண்ணிவெடி!

தருமபுரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

தருமபுரி, ஆக.27 ‘நீட்' தேர்வு என்பது ஒரு நவீன குலக் கல்வித் திட்டம்; நவீன மனுதர்மத் திட்டம்; ஆர்.எஸ்.எஸி னுடைய கண்ணிவெடி என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 24.10.2021 அன்று தருமபுரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டி வருமாறு:

உச்சநீதிமன்றம் சொன்னது என்று ஒரு தவறான கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

நீட் தேர்வு என்பது சட்ட விரோதம் - அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிரானது. ஆனாலும், உச்சநீதிமன்றம் சொன்னது, உச்சநீதிமன்றம் சொன்னது என்று ஒரு தவறான கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அவர்கள் அமைத்து, அறிக்கை தரவேண்டும் என்பதற்காக நியமித்தபோது, பா...வி னர் உச்சநீதிமன்றத்தில் அதற்கு அனுமதி கேட்டீர்களா? இதுபோன்று செய்யலாமா? என்றெல்லாம் கேட்டார்கள்.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்மூலம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது

அதுவே தவறு என்பது - அவர்கள் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதிலிருந்தே தெளிவாகி விட்டது. உச்சநீதிமன்றம்தான் இதைப்பற்றி முடிவெடுக்க முடியும் என்று அவர்கள் சொன்ன வாதம் - ஏற்கக்கூடிய வாதம் அல்ல என்பதை, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் - இதைக் கேட்பதற்கு உங்களுக்கென்ன உரிமை இருக்கிறது? என்று தலைமை நீதிபதி கேட்டதிலிருந்தே - உச்சநீதிமன்றம்தான் இதில் முடிவெடுக்கவேண்டும் என்பது ஒரு தவறான வாதம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

அதற்கு அடுத்தபடியாக, இரண்டு மசோதாக்களை ஏற்கெனவே முதலில் நிறைவேற்றியிருந்தாலும், அதற் கும், இப்பொழுது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. அது என்னவென்றால், தி.மு.. ஆட்சியில் நிறைவேற்றப் பட்டுள்ள மசோதா என்பது, ஆய்வறிஞர்களின் குழு அமைத்து, ஆதாரப்பூர்வமாக, சட்டப்பூர்வமாக ஆய்வு நடத்தி, அறிக்கையை வாங்கி, அதற்குப் பிறகு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தருமபுரி பகுதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது!

ஆகவேதான், இதனை அவ்வளவு சுலபத்தில் அவர்களால் புறந்தள்ள முடியாது; வேண்டுமானால் காலந்தாழ்த்தலாம்; ஆனால், அதற்காக மக்கள் கிளர்ச்சி வரும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எப்படியிருந்தாலும், இது ஒரு தொடர் போராட்டமாக - மக்கள் போராட்டமாக நடக்கும். 18 மாணவர்களின் உயிர்கள் பலியாகியிருக்கின்றன; அதேபோல, நான்கைந்து பெற் றோர் அதனால் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பகுதி கூட அதனால் பாதிக்கப்பட்ட பகுதி என்பது உங்களுக் கெல்லாம் தெரியும்.

அதுவும் குறிப்பாக கிராமத்துப் பிள்ளைகள் இன்ன மும் அச்சத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய சூழல் இருக்கிறது.

ஆள்மாறாட்டம் - கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

எனவே, ஒரு நீண்ட சட்டப் போராட்டம் இருக்கிறது; மக்கள் மன்றப் போராட்டமும் இருக்கிறது. ஆகவேதான், இந்த நீட் தேர்வு ஒழிப்பு என்பது மிக முக்கியமானது.

முன்பு, இதனைப் புரிந்துகொள்ளாத மாநிலங்கள், இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றன. எந்த நோக்கத் திற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்தார்களோ - அந்த ஊழல், இதில் ஒழிக்கப்படவில்லை என்பது தெளிவாகி விட்டது.

ஆள்மாறாட்டம் - கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது - ஏழைகளுக்கு அறவே வாய்ப்பு இல்லை; கிராமப்புற மாணவர்களுக்கு அறவே வாய்ப்பு கிடையாது என்பதெல்லாம் தெளிவாக வெளியாகியிருக்கிறது.

நீட்' தேர்வு என்பது ஆர்.எஸ்.எஸினுடைய கண்ணிவெடி!

எனவேதான், இந்த நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்பதற்கு ஒரு பக்கம் அரசாங்கம் சட்ட ரீதியாகப் போராடிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மக்களை ஆயத்தப்படுத்தவேண்டும்; பெற்றோரின் குமு றலை எடுத்துச் சொல்லவேண்டும்; மாணவர்களிடையே ஒரு நல்ல நம்பிக்கையை உருவாக்கவேண்டும். தமிழ் நாட்டில் இருக்கின்ற  ஒடுக்கப்பட்டோருக்கு மருத்துவக்  கல்வி என்பது கனவு - அவர்கள் அதை  இனி நினைக்கக்கூடாது என்ற ஒரு கொடுமையை உருவாக்கி ஒரு நவீன ஆர்.எஸ்.எஸினுடைய கண்ணிவெடியாக அது இருக்கின்ற காரணத்தினால்தான், நீட் தேர்வை எதிர்க்க வேண்டியதாக இருக்கின்றன.

இன்றைக்குக் காலையில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நான் சொல்லியிருக்கிறேன், நீட் தேர்வை கொண்டுவருவதற்கு அடித்தளமாக இருந்த ஒரு நீதிபதி, வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

‘‘எனக்கு அதிகாரம் இருந்தால், மனுதர்மத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக ஆக்குவேன்'' என்று பேசியவர்தான் அந்த நீதிபதி.

நீட்' தேர்வு: ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் - நவீன மனுதர்மத் திட்டம்

ஆகவேதான், இது ஆர்.எஸ்.எஸினுடைய முழு அடித்தளமாக உருவாக்கப்பட்ட ஒரு நவீன குலக்கல்வித் திட்டம் - நவீன மனுதர்மத் திட்டம். ஒடுக்கப்பட்ட சமூக ஏழைப் பிள்ளைகள் அனைவரும் படித்து, டாக்டராகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

எப்படி நீதிக்கட்சி நூறாண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பட்ட பொழுதும், அதற்கு முன்பும், சமஸ் கிருதம் படித்தவர்கள்தான் டாக்டராகவேண்டும் என்று சொன்னார்களோ, அதேபோன்று இப்பொழுது இருக் கின்ற சூழலை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதற்காகவே நாங்கள் செல்லுகின்ற இடங்களிலெல் லாம் பிரச்சாரத் திட்டத்தை தொடங்கியிருக்கின்றோம். இதை ஒரு பெரிய மக்கள் திட்டமாக நடத்தவேண்டும்  -  இப்போது கரோனா காலகட்டமாக இருக்கின்ற கார ணத்தினால், இன்னமும் கட்டுப்பாடுகள் தளர்வில்லை.

அரசியல் கூட்டங்களோ, மற்ற நிகழ்வுகளுக்கோ பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்பதினால்தான், அரங்கங்களில் கூடி, அனைத்துத் தரப்பு மக்களுக்கு மத்தியில், இதை ஓரளவிற்கு, உங் களைப் போன்றவர்களின், ஊடகத்தினுடைய உதவியி னாலும் வெளியில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்து, கடந்த ஒரு வார காலமாக இந்தப் பணியில் இறங்கியிருக்கிறோம்.

திராவிடர் கழகம் இதில் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்திருக்கின்றது.

கடந்த 18 ஆம் தேதி முதல் தொடர் பிரச்சாரம்....

கடந்த 18 ஆம் தேதி இராஜபாளையத்தில், 19 ஆம் தேதி திண்டுக்கல்லில், 20 ஆம் தேதி நாகப்பட்டினத்தில், 21 ஆம் தேதி அரியலூரில், 24 ஆம் தேதி காலை வேலூரில், மாலை தருமபுரியில் என்றவாறு தொடர் பிரச்சாரம் நடந்துள்ளது.

அடுத்து பல ஊர்களில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என்று வரும். இடையில், ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினால், அரசியல் கட்சித் தலைவர்கள் அதில் மிகுந்த ஈடுபாடு காட்டவேண்டிய பொறுப்பு இருந்ததினால், நாங்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தபடி, மிகப்பெரிய அளவில், மதுரை, கோவை, சென்னை மற்றும் திருநெல்வேலி  போன்ற இடங்களில், நீட் தேர்வை எதிர்த்து, பெருந்திரள் கூட்டம் - என்ன வகையான போராட்டங்கள் என்பதை முடிவு செய்வோம்.

ஆகவே, ‘நீட்' தேர்வு ஒழிப்பு என்பதுதான் இந்தப் பயணத்தினுடைய நோக்கம்.

பா... காலூன்றவில்லைதோள் ஊன்றி வந்திருக்கிறது

செய்தியாளர்: தமிழ்நாடு பா... தலைவர் அண்ணா மலைக்கும், தமிழ்நாடு மின்துறை அமைச்சருக்கும் ஒரு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பா... தலை வர் அண்ணாமலை என்ன சொல்லியிருக்கிறார் என் றால், ‘‘தி.மு.. பா...மீது கை வைத்தால், வட்டி முத லோடு திருப்பிக் கொடுப்போம்'' என்று சொல்லியி ருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர்கள் திருப்பிக் கொடுக்கட்டும்; அதற்குப் பதில் என்ன வரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

முதலில் நான்கு இடம் மிஞ்சுமா? என்று பார்க்கட்டும். அந்த நான்கு இடங்களிலும், அவர்கள் காலூன்றி வர வில்லை; மற்ற கட்சிகள்மீது தோளூன்றியே வந்திருக் கிறது.

பா... காலூன்றவில்லை - தோள் ஊன்றி வந்திருக்கிறது.

தி.மு.., கிள்ளுக்கீரையல்ல - அவர் நினைப்பதுபோல!

இவர் போன்று பேசியவர்கள் எத்தனையோ பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.

வட்டி, முதலுமாகக் கொடுப்போம் என்கிறாரே, அவர்கள் வட்டிக் கடை நடத்துகிறார்கள் - ஏனென்றால், அடமானம் நிறைய வைத்திருக்கிறார்கள், பிரதமர் மோடி. இப்பொழுது பொதுத் துறை நிறுவனங்கள், மற்றவற்றை அடமானம் வைக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால், வட்டி, முதல் என்று சொல்கிறார்கள்.

150 நாள்களில் இதுவரை வேறு எந்த முதல மைச்சருக்கும் இல்லாத சிறப்பினை - மாநிலங்களின் முதலமைச்சர்களில், முதல் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்.

பா...விற்குப் புதிதாகப் பொறுப்பேற்றதினால், அவருடைய கட்சியைப் பலப்படுத்தவேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார். ஊராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் தனியாக நின்று வென்று காட்டுவோம் என்று சொன்னாரே, எத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்?

ஒரு நாள் செய்திக்காகப் பயன்படுமே தவிர - வேறொன்றுமில்லை

ஆகவே, அவர் சொல்வது ஒரு நாள் செய்திக்காகப் பயன்படுமே தவிர - வேறொன்றுமில்லை. அவரைப் பார்த்துப் பரிதாப்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆகவே, எது வட்டி, எது முதல் என்று அவர்களுக்குத் தெரியும்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.

No comments:

Post a Comment