கிராபிக் டிசைன், விண்வெளி கோள்கள் வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

கிராபிக் டிசைன், விண்வெளி கோள்கள் வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்

பெங்களூரு, அக். 26- கிராபிக் டிசைன், விண்வெளி கோள்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெங்களூருவை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வருபவர் சிறீவிஜய். இவர் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு கிறார். இவரது மனைவி வசந்தி, கம்ப்யூட்டர் பொறியாளர். தனது மகனை கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டார். இவர்களது மகன் தருண் (வயது6). சிறுவன் தருண் 2 வயதாக இருந்த போது, அவருக்குள் இருக்கும் திற மைகளை அவரது தாயார் கண்டு பிடித்தார். 14 மாத குழந்தையாக இருந்தபோது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ ருக்கு ‘‘ஆசிய ஸ்மார்ட் குழந்தை’’ என்ற விருது கிடைத்தது. அவருக்கு அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை என்ற விருதும் கிடைத்தது. சுயமாக கற்றலில் திறன் படைத்த தருண், அதற்காக இந்திய புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

பன்னாட்டு அளவில் நடை பெற்ற விண்வெளி தொடர்பான போட்டியில் பங்கேற்ற தருணுக்கு 59-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்படி 5 வயதுக்கு உள்ளாகவே அந்த சிறுவன் பல்வேறு சாதனை களை புரிந்துள்ளார். இந்த வரிசை யில் இளம் சாதனையாளர் தருண் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கிராபிக் டிசைனர், விண்வெளி கோள்கள் குறித்த படங்களை வரைதல், இணைய விளையாட்டுகளை சுயமாக உரு வாக்குதல் மற்றும் அனைத்து வகை திறனையும் வெளிப்படுத்தியதற்காக இந்த இடம் தருணுக்கு கிடைத்து உள்ளது.

தற்போது தருண், உலகின் மிக இளம் வயது கிராபிக் டிசைனர், கிரியேட்டிவ் விண்வெளி டிசைனர், இணைய விளையாட்டு உருவாக்கு பவராக திகழ்கிறார். இதற்காகத் தான் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் (வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு) தருணின் பெயர் இடம் பெற்றுள்ளது. தருண் தற் போது எம்.எஸ். பெயிண்ட், 3டி அனிமேசன் மற்றும் பல்வேறு மென் பொருள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளார்.

அவர் இதுவரை 80 கிராபிக் படங்களை வரைந்துள்ளார். விண் வெளித்துறையில் தருணுக்கு உள்ள ஆர்வத்தை கண்ட இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டினார்.

No comments:

Post a Comment