உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை!: பிரியங்கா காந்தி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை!: பிரியங்கா காந்தி உறுதி

லக்னோ,அக்.26- உத்தரப்பிர தேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதி அளித்தி ருக்கிறார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, மின் கட்டணம் குறைப்பு, நெல் - கோதுமை கொள்முதல் விலை உயர்வு, பள்ளிப் படிப்பு முடித்த மாணவிகளுக்கு இலவச கைப்பேசி மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஏற்கெனவே பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அந்த வகையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என பிரியங்கா காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் சுகாதார நடவடிக்கைகள் சரி இல்லாததால் சுகாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கரோனா காலத்திலும் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு அரசு நிவாரணங்கள் கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சைகளை அளிப்போம் எனவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர் சுற்றுப்பயணங்கள், பெண்கள் தொடர்பான அதிரடி அறிவிப்புகள் உள்ளிட்டவை காரணமாக, பிரியங்கா காந்தி பெண்களிடையே அதிகம் பேசப்படுவதன்மூலம்  காங்கிரசுக்கான ஆதரவும் பெருகி வருகிறது.

No comments:

Post a Comment