குழந்தைப் பருவ புற்றுநோயை சிகிச்சையால் குணப்படுத்தலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

குழந்தைப் பருவ புற்றுநோயை சிகிச்சையால் குணப்படுத்தலாம்

மருத்துவர் பிரதாப் சி.ரெட்டி தகவல்

சென்னை, செப்.14- இந்தியாவின் முதல் மெய்நிகர் டூவத்லான் நிகழ்வை அப்போலோபுற்றுநோய் மருத்துவ  மய்யம்  நடத்தவுள்ளது.  

குழந்தைப் பருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வை உருவாக்குவதும், சிகிச்சைக்கு ஆதரவளித்து நிதி திரட்டுவதும் அப்போலோ டி2டி 2021 நிகழ்வின் நோக்க மாகும். இந்நிகழ்வின் வழியாக திரட்டப்படும்  அனைத்து நிதி ஆதாரமும், அப்போலோவின் புற்றுநோய் மருத்துவர்கள் குழுவால் அடை யாளம் காணப்படும் இளம் புற்றுநோயாளி களுக்கு வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.  

இந்த அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு  பேசிய தமிழ்நாடு ஆளுநர்  பன்வாரிலால் புரோ ஹித், புற்றுநோய்க்கு அதிகப் பங்களிப்பு  செய்யும் காரணங்களுள் ஒன்று உடற்பருமன்.  மலக்குடல் புற்று, மாதவிடாய் நின்றதற்குப் பிறகு வரும் மார்பகப்புற்று, கருப்பைப் புற்றுநோய், உணவுக்குழல் பாதைப் புற்று, சிறுநீரகப்புற்று மற்றும் கணையப் புற்று போன்ற பல்வேறு புற்றுநோய்களுக்கான வாய்ப்பை அளவுக்கதிக உடல்எடை இருக்கின்ற உடல்பருமன் நேரடியாக அதிக ரிக்கிறது என்பதை ஆராய்ச்சிகள் வலி யுறுத்துவதாக குறிப்பிட்டார்.

அப்போலோ மருத்துவமனையின்  தலைவர் டாக்டர். பிரதாப் சி. ரெட்டி, பேசுகையில், ஆரம்ப நிலையில் நோய் அறிதல்  மற்றும் சிறந்த சிகிச்சையால் குணப்படுத்தக் கூடிய புற்றுநோய் குழந்தைப்பருவ புற்று நோய் என்று கூறினார். வளர்ந்த நாடுகளில்,  புற்றுநோய் பாதிப்புள்ள நான்கு குழந்தைகளுள் மூன்று குழந்தைகள் சிகிச்சைகள் மூலம் உயிர்பிழைக்கின்றன. இந்த உயிர்  பிழைப்பு விகிதம் ஏறக்குறைய 80 விழுக்காடாக  இருக்கிறது.  இந்தியாவில் இதை 100  விழுக்காடு ஆக்குவதே எங்கள் நோக்கம், என்று  அவர் கூறினார்.

No comments:

Post a Comment