ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·    வெளி நாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிட கிரீன் கார்டு வழங்குவதில் சில தளர்வுகளை பைடன் அரசு கொண்டு வர உள்ளது.

· பெகாசஸ் ஒட்டுக் கேட்பு வழக்கில் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

· பிள்ளையார் சிலையை ஏரிகளில் கரைக்க அய்தராபாத் நீதிமன்றம் அனுமதி மறுப்பு.

· வசதி குறைந்த குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு நீட் தேர்வு எதிராக உள்ளது. சுகாதாரம் மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு திணிப்பது சரியா? என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· நீட் விலக்கு மசோதா தமிழ் நாடு சட்டசபையில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் கேள்வித்தாள் ரூ. 35 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளதை கண்டறிந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீடு 30 சதவீதத்தை 40 சதவீதமாக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

- குடந்தை கருணா

No comments:

Post a Comment