சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம்: அ.தி.மு.க.வின் அறிக்கைக்கு அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம்: அ.தி.மு.க.வின் அறிக்கைக்கு அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனம்

சென்னை, ஆக.2 கதை,-கற்பனை,-அறியாமை, அடங்கிய அறிக்கை, சங்கம் வளர்த்த மது ரையில் கலைஞர் நூலகம் அமை வது .தி.மு..விற்கு கசக்கிறது என்று அமைச்சர் ..வேலு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது .தி.மு..வுக்கு கசக்கிறது. இதனால் தான் கதை, கற்பனை, அறியாமை அடங்கிய அறிக் கையை வெளியிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ..வேலு கடும் கண் டனத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அமைச்சர் ..வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.. அரசு நினைப்பது சரித்தி ரத்தை சிதைப்பதற்கு சமம்என்று .தி.மு.. ஒருங்கிணைப் பாளர் . பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை என்றஅறியாமை களின்தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத் திற்குரியது.

தென் தமிழ்நாடு மக்களின் கனவை நனவாக்க அங்குள்ள இளைஞர் சமுதாயம் ஏற்றம் பெற மதுரையில் கலைஞர் பெயரில் பன்னாட்டு தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி யுள்ளது.

கலைஞர் நூலகத்திற்கு” 7 இடங்களை தேர்வு செய்து, அவற்றுள் இறுதியாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியா ளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பென்னிக்குயிக் வாழ்ந்ததாக திடீரென ஒரு புரளியை கிளப்பி விட்டு பொய்ச் செய்தியைப் பரப்பி இப்போது அறிக்கை வடிவில் வெளியிட்டு மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று .தி.மு.. வழக்கம் போல் தங்களது மலிவு அரசியலை நடத்துவது அப் பட்டமாக வெளிப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களுள் ஒன்றான தி.மு.. ஆட்சியில் கலைஞர், சென்னை கோட்டூர்புரத்தில் உருவாக்கிய அண்ணா பெயரிலான நூற் றாண்டு நூலகத்தைச் சிதைத் தார்கள். கலைஞர், நாள் தோறும் உன்னிப்பாக கண் காணித்து தொலைநோக்குப் பார்வை யுடன் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை காழ்ப் புணர்ச்சி யோடு மாற்றினார்கள். வரலாற் றுச் சிறப்புமிக்க சாதனைத் திட்டங் களை சிதைத்த வர்கள், இப்போதுகலைஞர் நூலகம்அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெ ரிச்சலுடன் கற்பனைக் கதை களைக் கட்டவிழ்த்து, ‘.தி. மு.. எப்போதுமே தமிழ்நாட் டின் அழிவு சக்திதான்என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உணர்த்தியுள்ளார்கள்.

கலைஞர் நூலகத்திற்குதேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து வதந்தி கிளம்பிய போதே 1841-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பிறந்த கர்னல் பென்னிகுயிக் 1911-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயற்கை எய்தியுள்ளார். பொதுப்பணித்துறை ஆவணங் களைப் பரிசீலனை செய்ததில் இந்த கட்டடமானது 1912-ல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913 -ல் கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டட பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “கர்னல் ஜான்பென்னிகுயிக் மறைந்த காலத்திற்கு பின் கட் டப்பட்ட கட்ட டம் என்பதால் இக்கட்டடத்தில் அவர் வாழ்ந் ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெளிவாக தெரிவித்துள் ளார்.

இளைஞர்கள் கல்வியறிவு பெறுவதும் பிடிக்கவில்லை; தென் தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் இந்த நூலகம் - சங்கத் தமிழின் தலைநகராம் மதுரை யில் அமைவதையும் இவர்கள் விரும்ப வில்லை. எனவே கங்கணம் கட்டிக்கொண்டு விஷத்தைக் கக்குகிறார்கள். அன்னைத் தமிழ் இவர்களுக்கு ஆட்சியிலிருந்த போதும் கசந்தது. கர்னல் பென்னிகுயிக் சிலை வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். அதை புதுப் பொலிவுடன் மாற்றி யது தி.மு.. ஆட்சி. முல்லைப் பெரி யாறு விவகாரத்தில் உழவர் களின் உரிமைகளை நிலை நாட்டி இன்றைக்கு தென் தமிழ் நாட்டின் முக்கிய மாவட்டங்கள் பயனுறும் நிலையை உருவாக் கியதும் தி.மு.. ஆட்சி தான் என்பதை . பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உணர வேண்டும்.

ஆகவே கதை அளந்துகலைஞர் நூலகத்தைதடுத்து விடலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். மதுரை மாநகரில் கலைஞர் பெயரிலான நூலகம் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையி லான ஆட்சியில் கம்பீரமாக எழும்- இளைஞர்கள் எழுச்சி பெறுவர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment