கணவனா, படிப்பா? - படிப்பே என புதுமணப்பெண்ணின் துணிவு : பொதுமக்கள் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

கணவனா, படிப்பா? - படிப்பே என புதுமணப்பெண்ணின் துணிவு : பொதுமக்கள் பாராட்டு

பாட்னா,ஆக.2- பீகாரில் படிப்பைத் தொடருவதற்காக கணவனை பிரிய புதுமணப்பெண் முடிவெடுத்துள் ளார். அப்பெண்ணின் துணிச்சலான முடிவுக்கு அப்பகுதிமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அப் பிரச்சினையில் அப்பெண்ணுக்கு கிராம பஞ்சாயத்து அனுமதி வழங்கி உள்ளது.

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமா ருக்கும் ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேஹா குமாரிக்கும் (வயது 19)கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. 12ஆம் வகுப்பு படித்த நேஹா தொடர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதை கணவரும் அவரது குடும்பத்தினரும் ஏற்காததால், வீட்டை விட்டு வெளியேறி பாட்னா சென்றுள்ளார் நேஹா.

இதனிடையே, நேஹாவின் தந்தை  தனது மகள் கடத்தப்பட்டிருக் கலாம் என சுல்தான்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அறிந்த நேஹா, கங்கானியா பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து முறையிட்டுள் ளார். இதையடுத்து, 2 குடும்பத்தி னருக்கும் கிராம பஞ்சாயத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் நேஹா கூறும்போது, “என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய் தனர். நான் அய்டிஅய் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் இதை ஏற்க என் கணவர் மறுக்கிறார். எனவே கணவரை பிரிய அனுமதி வேண்டும்என்றார்.

இதுகுறித்து தாமோதர் சவுத்ரி கூறும்போது, “இருகுடும்பத்தினரை யும் சமாதானப்படுத்த முயற்சி செய்தோம்.ஆனால் பலன் கிடைக்க வில்லை. இதையடுத்து, நேஹாவின் விருப்பப்படி அவர் கணவரிடமி ருந்து பிரிந்து செல்ல அனுமதி வழங்கினோம்என்றார்.

வரும் காலத்தில் இந்த விவகா ரத்தில் நேஹாவை கட்டாயப் படுத் தக் கூடாது என இருதரப்பிலும் ஒப் பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சுல்தான்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி லால் பஹதுர் கூறும்போது, “கிராம பஞ்சாயத்தின் நடவடிக்கை பாராட்டுக் குரியது. இந்த நடவடிக்கை காவல் துறை மற்றும் நீதித் துறையின் சுமையைக் குறைக்கும் வகையில் உள்ளதுஎன்றார்.

No comments:

Post a Comment