கரோனா பாதிப்பு: ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

கரோனா பாதிப்பு: ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி,ஜூலை21- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 19.7.2021இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதைய டுத்து இரு அவைகளும் கூட்டம் தொடங்கிய முதல்நாளில் நாள் முழுவதும் அவைத் தலைவர்கள் ஒத்திவைத்தனர்.

கூட்டத்தொடரின் இரண்டா வது நாளில் 20.7.2021 அன்று காலை முதலே எதிர்க்கட்சிகள் மக்களவை யில் அமளியில் ஈடு பட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். பின்னர் சபை கூடியதும் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட் டதால்  மக்களவை நடவடிக்கைகள்  பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக் கப்பட்டன.

அதேபோல, மாநிலங்களவையி லும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்தி வைத்தனர். மீண்டும் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியால்  மாநிலங்களவை பிற் பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. பிற்பகல் 1 மணிக்கு கரோனா தொடர்பான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட் டது.

இந்த நிலையில் 1 மணிக்கு மேல் எதிர்கட்சிகளின் அமளிக்கிடை யில் மாநிலங்களவை நடைபெற் றது. காகிதங்களை கிழித்தெறிந்து பதாகைகளை ஏந்தியும் எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை மீண்டும் மதியம் 1.34 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மூன்றாவது முறையாக மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே 

அமளிக்கிடையே மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  அவையில் பேசும் போது கூறியதாவது;-

மருத்துவர்கள் மற்றும் மருத் துவப் பணியாளர்கள் உள்பட கரோனாவுக்கு எதிராக போராடுப வர்களுக்கு மரியாதை செலுத்துகி றேன். டில்லியில் கரோனா இரண் டாம் அலையின்போது மற்றவர் களுக்கு ஆக்சிஜன் விநியோகம், பிளாஸ்மா தானம் செய்து உதவி யவர்களை நான் வணங்குகிறேன்.

முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் பல மாநில தேர்தலில் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். உங்களது விதிமுறைகளை நீங்களே மீறுகிறீர்கள். கரோனா நெறிமுறை களைப் பின்பற்றாததற்காக அவர் களைப் பாராட்ட வேண்டும்.

பாத்திரங்களை தட்டச் சொல் லியும், மெழுகுவத்தியை ஏற்றச் சொல்லியும் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர்.

ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். இதற் கான பழியை தான் ஏற்றுக்கொள் ளாமல் சுகாதாரத் துறை அமைச் சரை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கிவிட்டார் என கூறினார்.

No comments:

Post a Comment