தமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 25, 2021

தமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா?

மாநிலங்களவையில் பி. வில்சன் கேள்வி

புதுடில்லி, ஜூலை 25- தமிழ் நாட்டில் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை சுத்தப்படுத்த செலவழிக்கப்பட்டதா' என, தி.மு.., மாநிலங்களவை உறுப் பினர் பி. வில்சன் கேட்ட கேள் விக்கு, ஒன்றிய கார்ப்பரேட் விவ கார துறை இணை அமைச்சர் இந்தர் ஜித் சிங் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியதாவது: கரோனா பாதிப்பு காரணமாக, 'கார்ப்பரேட்' தொழில் நிறுவ னங்கள், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியை, 'பி.எம்., கேர்ஸ்' நிதி கணக்கில் செலுத்த வேண்டும் என, கடந்த ஆண்டு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அப் போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சி.எஸ்.ஆர்., நிதியை, அந்தந்த மாநில அரசு களிடம் கொடுக்க வேண்டும் என்றும், சிலர் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், இப்படி பெறப் பட்ட சி.எஸ்.ஆர்., நிதி எப்படி செலவிடப்பட்டது என, ஒன்றிய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி அனுப்பினேன். அதற்கு, ஒன்றிய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு என் னென்ன இனங்களின் கீழ், சி.எஸ்.ஆர்., நிதி செலவிடப்பட்டது என்பதை பட்டியலிட்டு, புள்ளி விபரங்களுடன் அவர் கூறியுள் ளார்.

அவர் கூறியுள்ளதாவது: தமிழ் நாட்டில் 2017_2018ஆம் நிதி யாண் டில் 1,305 நிறுவனங்கள், 627.75 கோடி ரூபாய்; 2018_-2019இல் 1,455 நிறுவனங்கள், 829.27 கோடி ரூபாய்; 2019-_1920இல் 1,316 நிறுவ னங்கள், 919 கோடி ரூபாய், சமூக பொறுப்பு நிதியாக அளித்துள்ளன. விலங்குகள் நலன், கல்வி, சுகாதார பராமரிப்பு, குடிநீர், குடிசை பகுதி மேம்பாடு ஆகியவற்றுக்காக, கார்ப்பரேட் நிதி செலவிடப் பட்டு உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட சி.எஸ்.ஆர்., நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை தூய்மை செய்வதற்காக செலவிடப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறியிருக் கிறார். எப்படி நம்புவது? .பி., உள் ளிட்ட அய்ந்து வட மாநிலங்களில் மட்டுமே பாயும் கங்கை நதி, தமிழ் நாட்டில் பாயவில்லை. தமிழ்நாட் டில் பாயாத கங்கையின் தூய்மைக் காக செலவிட்டதாக சொன்னால், அதை எப்படி நம்புவது?ஒன்று, கொடுக்கப்பட்ட விபரங்கள் தவ றாக இருக்க வேண்டும்; இல்லை யென்றால், பொய்யாக இருக்க வேண்டும். இதில் எது உண்மை? ஒன்றிய அரசு தான் விளக்க வேண்டும்! இவ்வாறு வில்சன் கூறினார். நிறுவனங்கள் தாங்களே செலவு செய்யலாம்!

இந்திய கார்ப்பரேட் நிறு வனங்கள் சட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள நிறுவனங்கள்; 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்; ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டும் நிறுவனங்கள்; தங்களின் லாபத் தொகையில் இருந்து 2 சதவீதத்தை, கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதிக்கு அளிக்க வேண்டும். இந்த நிதியை, சம்பந் தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக செலவு செய்யலாம். இந்த நிதிக்கான திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியை, அந்த நிறுவனத்தின் குழுவே மேற்கொள்ளும். இதில் அரசின் வழிகாட்டுதல், கெடுபிடி எதுவும் இருக்காது.இப்படி இருந்த நிலையை தான், கடந்த ஆண்டு ஒன்றிய அரசு மாற்றி, கார்ப்பரேட் பொறுப்பு நிதியை, பிரதமரின், 'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு அளிக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment