தமிழ்நாட்டில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

தமிழ்நாட்டில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோவை,ஜூலை 21- ஜிகா வைரஸ் மற்றும் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச் சாவடி பகுதியில் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (20.7.2021) ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

புதிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகை யில் ஜிகா வைரஸ் தாய்மார்களை பாதித்து வருகிறது. தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையோர கிராமப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்ட றியப்படவில்லை. ஜிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சோதனைச்சாவடிகளில் சுகாதா ரத்துறை அதிகாரிகள்,  வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பணிகளில் ஈடு பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேவைக்கேற்ப கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புப் பணியில் 21 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் 14,833 வாகனங்களும் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டு உள்ளது கோவைக்கு இதுவரை 10,97,000 தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளி லும் இலவசமாக கரோனா தடுப் பூசி போடும் பணியை தொடங்க உள்ளோம். கோவையில் முதன் முறையாக தொடங்கப்பட உள் ளது. சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் மூலம், தனியார் மருத்துவமனை களில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்படும். தமிழ்நாடு முழுவ தும் இத்திட்டம் தொடங்கப்படும்

தனியார் மருத்துவமனைகளில் முழு வீச்சில் தடுப்பூசி போடப்பட வில்லை. இதனால் தனியார் மருத் துவமனைகளுடன் பேசி தடுப் பூசியை முழு அளவில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்கு தடுப்பூசி முறை கேடாக விற்பனை செய்வது தொடர்பாக நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தடுப்பூசி போடும் இடங்களில் கட்சி தலையீடு இருந்தால் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment