ஒன்றிய அரசுக்கு எதிராக ஓரணியில் 14 எதிர்க்கட்சிகள் - ஜனநாயகத்தைக் காத்திட புதிய திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

ஒன்றிய அரசுக்கு எதிராக ஓரணியில் 14 எதிர்க்கட்சிகள் - ஜனநாயகத்தைக் காத்திட புதிய திட்டம்

புதுடில்லி,ஜூலை29- ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல் பாடுகளைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து செயல்படுவதென முடிவு செய்துள்ளனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கிய 14 எதிர்க்கட்சிகளின் ஆலோ சனைக் கூட்டம் நேற்று (28.7.2021) நடைபெற்றது. காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி உள் ளிட்ட காங்கிரசு கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக,  இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஅய்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்)  கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பி னர்களான டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல், சிவ சேனாவின் சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டு கட்சியின் ஹஸ்னைன் மசூதி, சிபிஎம் இளமாரம் கரீம், சிபிஅய்-ன் பினோய் விஸ்வம், ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான், ஆர் ஜேடியின் மனோஜ் ஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங் கியது. இந்த மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விக்கணை களை தொடுத்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை இரண்டும் தொடர்ச்சி யாக ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கின. பெகாசஸ், வேளாண் சட் டங்கள் உள்ளிட்ட முக் கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற் கொண்டனர்.

மக்களவையில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரியுள்ளனர்.  அதேபோல் விவசாய சட்டங்கள், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினை களில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஏற்கெ னவே கூட்டாக எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந் நிலையில் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து 14 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

தமிழில் முழக்கம்

நாடாளுமன்றத்தில் நிலவும் மோதல்களுக்கிடையில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் விவாதம் நடத்த  அரசுக்கு  அழுத்தம் கொடுக்க முடிவு செய்தனர்.  மாநிலங்களவையில் விவாதம் கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக "வேண்டும், வேண்டும், விவாதம் வேண் டும் என்று தமிழில்" முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தி அல்லது ஆங்கி லத்தில் முழக்கமிடுவதுதான் வழக்கம். ஆனால் நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரின் மாநிலங் களவை கூட்டத்தில் சட்டத் திருத்த மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்வேண்டும், வேண்டும், விவாதம் வேண் டும்என்று தமிழில் முழக்கமிட்டனர்.

விவாதம் வேண்டும்

தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பி னர்கள் மட்டுமின்றி, மற்ற மாநில உறுப்பினர்களும்வேண்டும், வேண் டும், விவாதம் வேண்டும்என்று தமிழிலேயே முழக்கமிட்டனர்.ஆனால் கடும் அமளிக்கு இடையே அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிறார் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.இது குறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சரும்  காங்கிரஸ் உறுப்பினரு மான ஜெயராம் ரமேஷ் தனது சுட் டுரைப் பதிவில், வழக்கமான மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் முழக்கம் எழுப்புவார்கள். ஆனால், இந்த முறை வித்தியாசமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் தமிழ் மொழி இணைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

10 உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிப்பு

காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக் கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை நட வடிக்கைகளுக்கு குந்தகமாக செயல் பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மணிக் கம் தாகூர், டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், எஸ்.ஜோஈமணி, ரவ்னீத் பிட்டு, குர்ஜீத் அஜ்லா, டி.என்.பிரதாபன், வி.வைத்திலிங்கம், சப்தகிரி சங்கர், .எம். ஆரிப், தீபக் பைஜ் ஆகியோர் ஆவார்கள். பின்னர் மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment