அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் ஓவியம் வரைந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா மகன் தமிழர் தலைவருக்கு நன்றி!

போற்றுதலுக்குரிய மானமிகு ஆசிரியர் அவர்கட்கு,

பணிவார்ந்த வணக்கம் !!

பொதுமறை கண்ட திருவள்ளுவருக்கு மனம் போன போக்கில் மதச்சாயம் பூசி இருட் டடிப்பு செய்து வரும் இந்த வேளையில், தக்க தொரு ஒளிக்கீற்றாகத் தங்களது அறிக்கை வெளிப்பட்டு நிற்கின்றது. அதுகண்டு உள்ளம் குதூகலிக்கின்றது.

1967இல் - பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் உட்பட்ட அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம் வைக்கப்பட வேண்டும் என போடப்பட்ட அந்த அரசாணைக்கு (GOMS 1193) புத்துயிர் கொடுத்து உயர்த்திப் பிடிக்க வலியுறுத்திய தங்களுக்குத் தமிழ்க் கலைஞர்கள் சார்பிலும் - ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் மகன் என்ற வகையிலும் கோடி நன்றிகளைக் குவித்து வணங்குகிறேன்.

நன்றி ! நன்றி !!

நிறைவும் - பேரன்புமாக,

வே.சிறீராம் சர்மா (இபான் சிறீராம்)

எழுத்தாளர் - இயக்குநர்

ஓவியப் பெருந்தகை

கே.ஆர்.வேணுகோபால் சர்மா

அவர்களின் மகன்.

தொடர்பு : 73973 50733.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image