பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் டாக்டர் சோம. இளங்கோவன் அறிவிப்பு

திருவாரூர் மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 4.6.2021 மாலை காணொலி மூலம் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில், பொதுச் செயலாளர் இரா. செயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அறிவித்ததாவது:

தமிழ்நாட்டில் 19 திராவிடர் கழக மண்டலங்களில் - பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகம் - பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் இருபால் மாணவர்களுக்கும் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.5000, பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் வழங்கப்படும் - என்று இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அறிவித்துள்ளார்.

Comments