ஆசிரியருக்கு கடிதங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு வணக்கம்.

30.5.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற 25 மாணவர்கள் - 25 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில், நமது இயக்கம் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு தொண்டு செய்த ஆசிரியர்கள், பேராசிரியர்களின் நீண்ட பட்டியலை தாங்கள் கூறியது என்னைப் போன்ற கல்வித்துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.

90 ஆண்டுகளுக்கு முன்பு

எழுத்தறிவு, படிப்பறிவு குறைவாக இருந்த காலத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பாக சுயமரியாதை இயக்கம் என்பதைத் தொடங்கி, 'குடிஅரசு' இதழைத் தொடங்கி அவற்றின் வழியாக தனது கருத்துகளை சொன்னதோடு அல்லாமல் தனது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உலகம் முழுவதும் இருக்கும் வால்டேர், பகத்சிங், இங்கர்சால், ரூசோ, லெனின் போன்ற சிந்தனையாளர்களின் வாழ்க்கை சரித்திரம் மற்றும் அவர்களின் நாத்திகக் கருத்துகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழர்களிடையே முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த, தனித்தன்மை பெற்ற தலைவராக தந்தை பெரியாரை உங்களது உரை புதிய மாணவர்களிடத்திலே படம் பிடித்து காட்டியது. கடவுள், மதம் போன்றவை பற்றி இந்த இயக்கம் பேசுவதற்கு காரணம் அவற்றை வைத்து தான் ஜாதி நிலைநாட்டப்படுகிறது. சமத்துவமின்மை நிலைநாட்டப் படுகிறது. அந்த ஜாதியை ஒழித்து சமத்துவம் கொண்டு வருவதுதான் தந்தை பெரியாரின் நோக்கம், அதற்குத் தடையாக இருக்கும் கடவுள், மதம், புராணம் போன்றவைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறோம் என புதிய மாணவர்களுக்குப் புரியவைத்துள்ளீர்கள்.

அம்பேதகர் நூல்

வடநாட்டில் தனது கருத்துக்கு ஒத்த கருத்தைப் பேசிய டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளைஜாதியை ஒழிக்க வழிஎன்ற தலைப்பில் அம்பேத்கரிடம் தொடர்பு இல்லாதபோதே தமிழில் வெளியிட்டது பெரியார் அய்யா தன்னை முன்னிறுத்தாமல் கருத்தை முன்னிறுத்தினார் - என தாங்கள் எடுத்துரைத்தது இளம் தலைமுறையினரை நெறிபடுத்தும் உரையாக அமைந்தது

'தஞ்சை மாடல்'

 மேலும் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் நோக்கில் கேள்வி பதிலாக அமைந்த தங்களது உரையில் உங்களின் மறக்கமுடியாத அனுபவம் எது? என்ற ஒரு மாணவரின் கேள்விக்குஒரு மாணவராகவே மாறி தனது மாணவப்பருவத்து நிகழ்வுகளை மாணவர் களுக்குப் புரியும் வண்ணம் தாங்கள் எடுத்துக் கூறிய விதமும், தாங்கள் உரையில் கூறிய ஒவ்வொரு கருத்திற்கும் ஆதாரமாக பல புத்தகங்களை காண்பித்ததும்புதிய பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நமது இயக்கத்தைப் பற்றிய நன்மதிப்பையும், இயக்கத்தின் மீது ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு இன்றைய உரையில்தஞ்சை மாடல்என்பதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத் தின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக திட்டமிட்டு இதுபோன்ற பயிற்சி வகுப்பைத் தொடங்க வேண்டும் என தாங்கள் அறிவுறுத்தியதும்,

திராவிடப் பெரும் குடும்பத்து உறவு

இந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கும் வகையில் ஜாதி, மத, பாலின பேதமற்றதிராவிடப் பெருங்குடும்பத்து உறவுஎன்ற அடையாளத்தின் கீழ் திராவிடத்தை முன்னிறுத்தி அழைக்கப்படுவார்கள் என தாங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் இயக்கத் தோழர்களுக்கும், புதிதாக வந்திருக்கும் மாணவர்களுக்கும் எழுச்சியை, உத் வேகத்தை அளிக்கிறது.

நன்றி அய்யா

இப்படிக்கு

நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல்,

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்.

- - - - -

88 வயதில் மூன்றுமணி நேரம் நமக்காக ஒரே இடத்தில் அமர்ந்து அறிவு பாய்ச்சிய நம் அய்யா தமிழர் தலைவர் வழிநடப்போம்!

அய்யா அவர்களை பார்த்தது, அவர்கள் முன் பேசியது, அவர் எங்கள் பெயரை கூறியது அனைத்தும் இப்போதும் கனவு போல் உள்ளது... வாய்ப்பளித்தமைக்கு நன்றி அய்யா.

மனநிறைவு! மிக்க நன்றி  அய்யா! கடந்த 25 நாள்களாக எங்களை வழி நடத்திய தோழர், பயிற்றுவித்த தோழர்கள், தக்க நேரத்தில் அய்யங்களைத் தீர்த்த தோழர்கள், உடன் பயின்ற மாணவ தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும். வாழ்க மனிதம்! வளர்க சமத்துவம்! வாழ்க பெரியார்!

25 நாள்களாக ஒரு ராணுவ வீரன் எவ்வாறு பயிற்சி பெறுவானோ அவ்வாறு பயிற்சி பெற்று இன்று முதல் நாங்கள் திராவிட ராணுவ வீரர்களாக சமுதாய தொண்டாற்றவுள்ளோம்.... எங்கள் தளபதி *பெரியார்*...எங்கள் கொள்கை *சமத்துவம்*...எங்கள் பலம் *ஒற்றுமை*...எங்கள் பணி *அறப்பணி*....

எங்களை இத்தனை நாள்களாக பயிற்றுவித்த ஆசிரிய தோழர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும்.

 25 நாள்கள் நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியென்பதை வெறும் வகுப்பாய் மட்டும் கருதாமல், சமூகத்தில் பெரியாரிய சித்தாந்தத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டு வர நாம் கண்ட முன்னோட்டங்கள் என்பதை நித்தம் நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

 வகுப்பில் பங்கேற்ற உங்களுடன் நட்பைப் பகிர்ந்து கொள்ள  போதிய நேரம் கிடைக்கவில்லை.

இருந்தும் நம்மால் ஆற்றப்படவேண்டிய கடமையே மிகவும் அவசியமானது.

 பங்கேற்ற உங்களுக்கும், பயிற்றுவித்த தோழர்களுக்கும், வகுப்பு ஏற்பாட்டளர்களுக்கும், நிறைவு செய்த ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.பவித்ரன். 

ராங்கியன்விடுதி கிராமம். புதுக்கோட்டை.

- - - - -

தோழர்களுக்கு வணக்கம்..

நிறைவு நிகழ்வில் நான் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. நான் பேச வாய்ப்பு கொடுத்த தோழருக்கு நன்றி..

ஆசிரியர் அய்யாவின் உரையை இன்று தான் முதன் முதலில் கேட்கிறேன்.. எளிமையாக, பொறுமையாக பேசிய ஆசிரியர் ஆசிரியரே என்று பெருமிதம் கொள்கிறேன்.

வணக்கம் தோழர்களே!

பெரியாரியல் பயிற்சி வகுப்பு 2021

கடந்த 25 நாள்களாகப் பெரியார் பயிற்சிப் பட்டறை என்னை உன்மையாகவே ஒரு யோக்கியனாக (அய்யா பெரியார் மொழியில்), பொதுநல வாதியாக, மானிடப் பிரியனாக வாழத் தட்டிக்கொடுத்து ஊக்குவித்துள்ளது.

இன்று நடந்த நிறைவு விழாவில் பேருரை ஆற்றிய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கனிவான அணுகுமுறையும், நாற்றுகளை (மாணவ தோழர்களை) கையாளும் விவசாயியின் பக்குவத்துடன் கையாண்ட விதமும் என்னை மிகவும் ஈர்த்தது. 1944இல் அய்யா பெரியார் கண்ட துடிப்புள்ள இளம் வீரமணியைப் போல் இன்று எங்களை ஆசிரியர் அவர்கள் அரவணைத்த விதம் மிகவும் பின்பற்றத்தக்க மாதிரி.

குறிப்பாக அய்யா அளித்த முத்தான மூன்று கருத்துகள்

தந்தை பெரியார் கொண்ட விசாலப் பார்வை

தந்தை பெரியார் கற்பித்த சுயமரியாதையின் நோக்கம்

தந்தை பெரியார் ஒப்படைத்துச் சென்ற மானிட நேயம்

என்னைத் தன்மானம், தன்னம்பிக்கை, தன் நிறைவு கொண்டு வாழச்செய்யும் என்பதில் அய்யம் இல்லை.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.” (குறள்: 391)

கடந்த 25 நாள்களாகக் கற்றுக்கொண்டோம் இனி கற்றுக்கொண்ட கொள்கைக்குத் தக நிற்போம்.

பெரியார் பயிற்சி வகுப்பு 2021 நடைபெற உழைத்த அனைத்து தோழர் பெருமக்களுக்கும், வகுப்புகளை நடத்திக் கொடுத்த அனைத்து பயிற்றுநர் தோழர்களுக்கும், உடன் பயின்று பயன் பெற்ற அனைத்து மாணவ தோழர் களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

வாழ்க மனிதம்! வளர்க சமதர்மம்! வாழ்க பெரியார்!

- ஜோன் மார்ஷல்

இறையியல் மாணவன்

ஷில்லாங் - மேகாலயா

- - - - -

 நான் என் வாழ்க்கையில் சந்தித்த முதல் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான்! இன்று அய்யா பகிர்ந்த கருத்து என்னுள் நன்கு பதிந்து விட்டது.  இனி வரும் காலகட்டத்தில் நான் என் வாழ்க்கைப் பயணத்தை 'நான்' என்று இல்லாமல் நாம்  என்று ஒரு சமூகநெறி முறையில் பயணம் செய்வேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு எழுந்து உள்ளது.  எனக்கு இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அனைத்து பேராசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி....

பா. கண்மணி

- - - - -

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..

பெரியாரியல் பயிற்சி வகுப்பு என்னை மேலும் தீட்டி கத்தியாக மாற்றிஉள்ளது.... இதுவரை நான் காணாத அரசியலும் கேட்காத பல செய்திகளும் கேட்டறிந்தேன்...எனக்குள் இன்னும் தீர்க்கப்படாத கேள்விகள் இருப்பினும் நான்  அதைப்பற்றி மேலும் யோசிக்க பெரியார் எனக்கு உதவிபுரிவார் என நம்புகிறேன்.....அது மட்டுமின்றி என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 

வணக்கம் அய்யா..

பெரியாரியல் பயிற்சி வகுப்பு ..

நிறைவு விழாவில் மானமிகு வீரமணி அய்யா அவர்கள் வருகை புரிந்தது பெரும் மகிழ்ச்சி...

அய்யா உங்களிடம் நடந்த கலந்துரையாடல் மிக எளிமையாகவும்.. நடந்த நிகழ்வுகளை சுவை மாறாமலும் கூறியிருந்தீர்கள்..

பெரியார் தாத்தாவுடன் இணைந்துப் பயணம் செய்த உங்களுடன்..

இன்று, நான் கலந்துரையாடல் நிகழ்த்தினேன்.. என்று நினைப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறேன் அய்யா...

வாய்ப்பளித்தமைக்கு நன்றி ..

என்றும் பெரியார் தாத்தா வழியுடன்..

   தர்ஷினி.சிகரூர்

- - - -

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

தேசத்தின் மானம் காக்க தலைவர்கள் களம்கண்ட பொழுது, மக்களின் மானம் காக்க போராடி பகுத்தறிவு, சுயமரியாதையை மக்களிடையே கொண்டு சென்றவர் பெரியார் அய்யா அவர்கள்.

கத்தியைவிடக்கூர்மையானது பேனா என்பதற்கேற்ப மக்களிடையே எழுத்துப் புரட்சியை உருவாக்கியது திராவிட இயக்கம். பள்ளியின்வாயில், மிதிவண்டி நிலையம், சிகையலங்கார கடைகளில்  ஏடுகளை வழங்கி, அனல் பொழியும் உரைகளாக மக்களிடையே எழுச்சியை வளர்த்து  புரட்சி யை ஏற்படுத்தியது திராவிட இயக்கம்.

அப்படி எழுச்சியை உருவாக்க பகுத்தறிவு பகலவன் அய்யா அவர்களால் ,இனத்தின் அடையாளமாகத் துவக்கப் பட்டவிடுதலைநாளேடு 87ஆம் அகவை காண்பது ஒட்டுமொத்த மானிட இனத்திற்கு பெருமை யானது.

மனிதன் ஆடையின்றி வீதியில் நடந்தால் எவ்வளவு அவமானம்? ஆனால், “விடுதலைநாளேடு கையில் இருந்தால் அவமானம் களைந்து மானமிகு மனிதர் ஆவார்கள். ஆடை போன்ற மானம் காக்கவிடுதலைநாளிதழ் ஒவ்வொரு கரங்களில் தவழ்வது தான் இனத்தின்உண்மையான  விடுதலை என இடித்துரைத்துவிடுதலையைப் பரவச் செய்யவேண்டும்.

ஒவ்வொரு விடியலும்விடுதலையோடு விடியட்டும். ஆளுக்கொரு 'விடுதலை', இல்லத்திற்கொரு 'விடுதலை' என்று பரவச் செய்வோம்.

மானிட இனத்தின் அடையாளமாகத்திகழும்விடு தலைநாளிதழ் மனித இனம் உள்ளவரை அதன் பணிகள் தொடரட்டும். 'விடுதலை' நாளிதழ் கையில் தவழ்வது பெருமை என்று போற்றிக் களிப்போம். “விடுதலைநாளிதழுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பொழுதைப் போக்க அல்ல, பொழுது சிறக்கவிடுதலைஒவ்வொருவர் கரங்களில் தவழட்டும்.

அன்புள்ள வாசகன்:

கழகத் தொண்டன்,

மு. சு. அன்புமணி,

16/13 முத்து தெரு, மதிச்சியம், காந்தி நகர் அஞ்சல்,

மதுரை 625020.

கைபேசி எண்: 8925119231

- - - - -

அய்யா அவர்களுக்கு

வணக்கம்

 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிறைவு விழாவில் நான் பேசியது மன நிறைவாக இருந்தது இவ்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தோழர் வடுவூர் முனைவர் .எழிலரசன் மற்றும் தோழர்கள், முனைவர்கள், பேராசிரியர்கள், பொறுப்பாளர் கள் அனைவருக்கும் நன்றி!

ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா உரையை முதன் முதலில் கேட்கிறேன் மனதில் பதியும்படி இருந்தது. நடவு செய்ய ஏற்ற நாற்று இளம் நாற்று. அந்த இடத்தில் இம் மாணவர்கள் இளம் நாற்றுகள் என்று எடுத்துரைத்தது எனக்கு மிகவும் பிடித்தது. “கற்க அதற்குத் தககண்டிப்பாக முயற்சிக்கிறேன்நிற்க அதற்குத் தகநின்று காட்டுவேன் அய்யா, எங்களை திராவிட குடும்பத்து உறவு என்று அழைத்தது என் மனதில் இது பயிற்சி பட்டறையின் நிறைவு விழா என்பது விலகி மனநிறைவு விழா என்றானது அய்யா!

தன் மானம்,

தன் நிறைவு,

தன்னம்பிக்கை இம் மூன்றும் அனைவருக்கும் வேண்டும் என்பதை எடுத்துரைத்தது மிக சிறப்பு,  தாடிக்கார தாத்தா (தந்தை பெரியார்) உரையாடலை நேரடியாகக் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இன்று முதல் அதுவும் இல்லை தலைவரே ......

நன்றி, வணக்கம்,

வாழ்க தந்தை பெரியார்!

வளர்க திராவிட புகழ்......!

என்றும் சமூகப் புரட்சியில்,

வடுவூர் .நிவேதா

கராத்தே பயிற்சியாளர்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image