‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்?? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??

மின்சாரம்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக முகப்பில் ‘‘தமிழ்நாடு அரசு’’ என்ற எழுத்துகள் ஒளிர்கின்றனவாம்!

இதில் என்ன குற்றம் கண்டனர்குயுக்திமதியினர் என்று தெரியவில்லை.

தினமலரில்’ (6.6.2021, பக்கம் 7) ‘‘தமிழ்நாடு அல்ல; தமிழகம் என்று அழைப்போம் இனி’’ எனும் தலைப்பில் திருவாளர் மாலன் என்னும் நாராயணனின் கட்டுரை வெளிவந்துள்ளது.

தி.மு.. ஆட்சியில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்மதறாஸ் ஸ்டேட்என்பதை ‘‘தமிழ்நாடு’’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் (1967 ஜூலை 18)  நிறைவேறியது.

முதலமைச்சர் அண்ணா அவர்களே அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார் என்பது அதன் தனிச்சிறப்பு.

இதற்கான அங்கீகாரமும் நாடாளு மன்றத்தில் கிடைத்தது (1968, நவம்பர் 1).

அதற்கான பாராட்டு விழாவும் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது (1.12.1968).

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், மருத்து வர்கள் தடுத்த நிலையிலும்கூட. முதலமைச்சர் அண்ணா அந்த நிகழ்வில் பங்கேற்றார்.

‘‘என் தாய்நாட்டுக்குத்தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்பதைவிட இந்த உயிர் இருந்து என்ன பயன்?’’ என்று நெக்குருகப் பேசினார் அறிஞர் அண்ணா.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதன் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு உண்டு.

திருவாளர் மாலன் எழுதுகிறார் - தமிழ்நாடு என்ற சொல் ஏற்கெனவே இருந்து வந்ததுதான். ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’’ என்றுதான் இருந்தது.

நிலப்பரப்பைக் குறித்து வந்த இந்தச் சொல் அரசியல் சொல்லாகப் பரிணாமம் பெற்றது தி.மு.. வளர்ச்சி கண்ட போதுதான் என்கிறார்.

இதில் வெறும் சொற்கள் இருக்கின்றனவே தவிர, பொருள் என்பது இல்லை. நிலமாக இருந்தது என்பதற்கும் - அரசியலாகி விட்டது என்பதற்கும் இடையிலான முரண்பாடு ஏதாவது இருந்தால், மாலன் விளக்கவேண்டியதுதானே!

இதில்கூட வரலாறு தெரியவில்லை - ‘‘தமிழ்நாடு’’ என்பது தி.மு.. வளர்ச்சி கண்டபோதுதான் வந்து குதித்ததாம்.

1938 இல் சென்னை மாநிலப் பிரதமராக இருந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இருந்தபோது இந்தியைத் திணித்தபோது தமிழ்நாடு தந்தை பெரியார் தலைமையில் பொங்கி எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரால் முழங்கப்பட்டது. ‘‘தமிழ்நாடு தமிழர்க்கே!’’ என்பதாகும் (11.9.1938).

அது அரசியல் முழக்கமா - நிலத்தின் அடிப்படையிலான முழக்கமா என்பதை மாலன் அவர்கள்தான் விளக்கவேண்டும்.

1960 ஆகஸ்ட் 19 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரஜா சோசலிஸ்டு கட்சி உறுப்பினர் பி.எஸ்.சின்னசாமி, ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர் மாற்றப்பட வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தாரே - இதன் பின்னணி என்ன, அரசியலா - வெறும் நிலமா?

தி.மு.. ஆட்சியில் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாநிலத்தின் பெயர் ‘‘தமிழ்நாடு’’ என்று மாற்றத்தில் மட்டும் அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதே (18.7.1967) - ‘‘தமிழ்நாடு வாழ்க!’’ என உறுப்பினர்கள் அனைவரும் மும்முறை முழங்கினார்களே - பிரஜா சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்னசாமி முன்மொழிந்ததற்கு முன்பா? பின்பா?

அதே பி.எஸ்.சின்னசாமி அவர்கள் இரண்டாம் முறையும் அதே தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன் மொழிந்ததுண்டே! (24.2.1961).

தீர்மானத்தை ஆளும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. - ஆனால், நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார், அறிக்கை ஒன்றினை.

அவ்வறிக்கை என்ன கூறுகிறது?

‘‘தமிழ்நாடு என்று பெயர் வைப்பதில் எங்களுக்கு வெட்கமோ, அவமானமோ இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று முன்னமே பெயர் வைத்திருந்தோம். அதனை மாற்றவே இல்லை. தமிழ் வளர்ச்சி, நாட்டுப் பற்று ஆகியவற்றில் காங்கிரஸ்காரர்களுக்கு அக்கறை குறைவு எதுவும் கிடையாது.

பல்வேறு பிரச்சினைகளைச் சிந்தித்துப் பார்த்து, இவ்விஷயத்தில் அரசினர் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை சென்னை இராச்சியம் என்று தமிழில் எழுதுகிறோம். இனித் தமிழில் எழுதும்போது சென்னை இராச்சியம் என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு என்று எழுதவேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்க நிருவாகம் - கடிதப் போக்குவரத்து ஆகியவற்றில் தமிழ்நாடு என்றுதான் எழுதப்படும்‘’ என்று நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே, அது அரசியலா - வேறு ஏதாவதா என்பதைதினமலரும்அதன் எழுத்தாளரும் விளக்குவார்களா?

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபணையில்லை என்ற காங்கிரசின் நிலைப்பாட்டை இவர்கள் எப்படிப் பார்க்கப் போகிறார்களாம்?

தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்ட சிறப்பு மாநாடு ஒன்றை சென்னை கோகலே ஹாலில் .பொ.சிவஞானம் மாநாடு ஒன்று நடத்தினாரே - அதற்கு எந்த வண்ணம் பூசப் போகிறார் திருவாளர் மாலன்?

டாக்டர் பி.வரதராசுலு நாயுடு அவர்கள்தமிழ்நாடுஎன்ற பத்திரிகையை நடத்தியதுண்டு. மதுரையில் கருமுத்து தியாகராய செட்டியார் அந்தப் பெயரில் நல்ல தமிழில் நாளேடு நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் எல்லாம் பிரிவினைவாதிகளா?

காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தாரே! (27.7.1956 - 13.10.1956)

அவர் என்ன தி.., - தி.மு..காரரா? தி.மு..கூட ஆட்சிக்கு வந்த நிலையில், முதலாவதாக அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை; அதற்கு முன்னதாக சட்டமன்றத்தில் இராம.அரங்கண்ணல் அப்படியொரு தீர்மானத்தை 1964 ஜனவரி 24 இல் முன்மொழிந்ததுண்டே! அதனை காங்கிரஸ் ஆட்சி ஏற்காத நிலையில், நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் தி.மு.. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்ற வரலாறு எல்லாம் இந்த அய்யன்மார்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாததுபோல பாசாங்கு போடுகிறார்களா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பூபேஷ் குப்தா தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய சுவையான தகவலாகும் (6.9.1963).

வரலாறு  மொழி கலாசார அடிப்படைகளுக்கு இசைவாக ‘‘தமிழ்நாடு’’ என்ற பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் தேசத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களிடம் ஆழமாக இருக்கிறது என்றால் காரசாரமான விவாதங்கள் அனல் பறந்தன.

அறிஞர் அண்ணாவை நோக்கி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். ஈரோட்டுக் குருகுலவாசியான அண்ணாவா அயர்வார்?

தமிழ்நாடு என்ற பெயர் மாறத்தின் மூலம் நீங்கள் எதை அடையப் போகிறீர்கள்?” என்று உறுப்பினர்கள் எழுந்து கேட்ட போது - அண்ணா கொடுத்த பதில் - நாடாளுமன்ற வரலாற்றில் என்றைக்கும் பேசப்படும்.

‘‘பார்லிமெண்ட் என்பதை லோக் சபா என்று பெயர் மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்யசபா என்று மாற்றியதன்மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?

பிரசிடெண்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?

உங்களிடம் நான் கேட்கிறேன், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தால், நீங்கள் எதை இழக்கிறீர்கள்?’’ என்று போட்டாரே! பகுத்தறிவியல் சிந்தனை அணுகுண்டை! வாயடைத்து எதிர்த்தரப்பினர் ஆசனத்தில் அமர்ந்ததுதான் மிச்சம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு (18.11.1967), நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு (21.11.1968) மறுநாள் நிறைவேற்றப்பட்டு விட்டதே!

விவாதத்தை முடித்து வைத்த உள்துறை அமைச்சர் சவான்,

‘‘தமிழ்நாடு பெயர் மாற்ற நடவடிக்கை மகத்தான தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது’’ என்று பேசவில்லையா?

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு என்றது நாடாளுமன்றம். மாலன் வகையறாக்களுக்கோ தமிழ்நாடு என்றால் வேறு மாதிரியாக வலி எடுத்து நெரி கட்டி நிற்கிறது.

பிறகு - தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நேரத்தில், ஆச்சாரியார்  (ராஜாஜி) அதில் ஒரு திருத்தம் சொன்னார்.  TamilNad  என்று இருக்கவேண்டும் என்றார். ‘யுவேண்டாம் என்றார். ஆச்சாரியாரின் நோக்கத்தை உணர்த்த அண்ணா அதனை ஏற்கவில்லை.

சட்டப்படி தமிழ்நாடு என்று ஆகிவிட்ட பிறகு, ‘‘தமிழ்நாடு’’ என்று தலைமைச் செயலகத்தில் பொறிப்பதுதானே சட்டப் படியும், நியாயப்படியும் சரியானது.

இதில் கோணல் குழி வெட்டுவது எந்த அடிப்படையில்? ‘நாடுஎன்று வந்துவிடக் கூடாதாம். அப்படி வந்தால் தமிழ்நாடு தனி நாடு என்ற பொருளைக் கொடுத்துவிடும் என்ற புழுக்கமும், அச்சமும், அதிர்ச்சியும் அக்ரகாரத்தைப் புரட்டிப் போட்டுத் தாக்குகிறது என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.

தனக்கென்று நாடு இல்லாதவர்கள் உலகில் யூதர்களும், பார்ப்பனர்களும்தான். அதனால்தான் இந்த வல்லடி, வம்படி, வக்கணை சில்மிஷங்கள்!

புதைக் குழியில் சிக்கிய காட்டெருமை வெளியில் வர முண்டியடிக்க, முண்டியக்க மேலும் புதைக் குழியின் ஆழத்தில்தான் சிக்கிப் பரிதவிக்கும் - பார்ப்பனர்களின் நிலையும் அஃதே!

தமிழ்நாடு பிராமணர் சங்கம் (TAMBRAS) நிலமா, அரசியலா, பிரவினையா என்பதை மாலன் வகையறாக்கள் உணர்த்துவார்களா?

No comments:

Post a Comment