நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கிய வனத்துறை சான்றை திரும்ப பெற வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை,ஜூன்10- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட் டம்  அம்பரப்பர் மலை யில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை  குடைந்து, அங்கே நியூட் ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மய்யம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின் றதுஇத்திட்டம் செயல் படுத்தப்பட்டால், மேற் குத் தொடர்ச்சி மலை மற் றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும்தமி ழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந் தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன்.

அதற்கு அரசுத் தரப்பில் தடையின்மைச் சான்று வாங்கவில்லை என பதில் மனுதாக்கல் செய்து இருந் தனர்.  ஆகவே,  நீதிமன்றம் தடை ஆணை  வழங்கி உள்ளது. எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப் பத்தை, தமிழக அரசு ஏற் கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும், தமிழக அரசு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். இவ் வாறு அறிக்கையில் கூறி யுள்ளார்.

Comments