கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட முழுமுடக்க நிபந்தனைகள்

 கரோன இரண்டாம் அலை வட இந்தியாவைப் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது, அரசு கொடுக் கும் தரவுகளின் படி தற்போது கரோனா நோய் தொற்று குறைந்துகொண்டு வருகிறது.

 மூன்றாம் அலை வராமல் இருப்பதற்காக வாரத்திற்கு 5%க்கும் குறைவான நேர்மறை விகிதம், பாதிக்கப்படக் கூடிய வயது கொண்ட மக்களில் 70% பேருக்கு தடுப்பூசி மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தை மற்றும் கவனிப்பின் சமூக உரிமைகள் என இவை மூன்றும் உறுதி செய்யப்படும் நிலையில் மாவட்டங்கள் ஊரடங்கு தளர்வு களை அறிவிக்கலாம் என்று மத்திய அரசு செவ்வாய்க் கிழமை அன்று கூறியுள்ளது.

அய்.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனர லும் இந்தியாவின் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் பால்ராம் பார்கவா, படிப் படையாக ஊரடங்கு தளர்வுகளை பின்பற்றுவதால் கரோனா தொற்றில் பெரிய எழுச்சி ஏற்படாது என்றும், மாவட்டங்கள் தடுப்பூசி அளிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூன்றாவது அலையைத் தடுப்ப தைப் பொறுத்தவரை, 5 சதவிகிதத்திற் கும் குறைவான நேர்மறை கொண்ட மாவட்டங்கள் சிறிய தளர்வுகளை அறிவிப்பது மிகவும் எளிதானது. பாதிக்கப்படக்கூடிய மக்கள் குறைந்தது 70 சதவிகித தடுப்பூசியை அடைய வேண்டும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த இலக்கு எட்டப்படவில்லை என்றால் அவர்கள் தடுப்பூசிகள் இலக்கை எட்டிய பிறகு ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் பார்கவா கூறினார்.

இந்தியாவில் உள்ள மொத்த 718 மாவட்டங்களில் 344 மாவட்டங்களில் கரோனா நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பார்கவாவின் கருத்து வெளியாகியுள்ளது. மே 7ஆம்  தேதி அன்று 92 மாவட்டங்களில் மட்டுமே நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக இருந்தது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மே 13ஆம் தேதி அறிவிப்பின் படி 45 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 32% பேர் தங்களின் முதல் டோஸை பெற்றுக் கொண்டனர்.

நாம் கடுமையான இரண்டாம் தொற்றின் மத்தியில் இருக்கின்றோம். தற்போது அதன் வீரியம் குறைந்து வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் 10%க்கும் அதிகமான நேர்மறை விகிதங்களை வெறும் 200 மாவட்டங்களே கொண்டிருந்தன என்பதை தரவுகள் காட்டுகின்றன. ஏப்ரல் மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 600 மாவட்டங்களாக அதிகரித்தது. தற்போது 239 மாவட்டங்கள் 10%க்கும் அதிகமான கரோனா நேர்மறை விகிதங்களைக் கொண்டுள்ளது. 145 மாவட்டங்களில் நேர்மறை தொற்று விகிதம் 5 முதல் 10%க்கு இடையே உள்ளது. மேலும் 350க்கும் மேற்பட்ட இந்திய மாவட் டங்களில் தற்போது நேர்மறை விகி தம் 5%க்கும் குறைவாக உள்ளது. எனவே நாம் தற்போது சரியான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கின் றோம் என்று பார்கவா கூறினார்.

மாவட்ட அளவிலான கட்டுப்பாடு கள் நல்ல முடிவுகளை காட்டினாலும் இது நிலையான தீர்வு அல்ல. எனவே, நாம் ஊரடங்கினை எளிமையாக்கு வதற்கு ஒரு நெறிமுறையை உரு வாக்க  வேண்டும். படிப்படியாக, மெதுவாக அதனை நாம் நடை முறைப்படுத்த வேண்டும். மூன்று முக்கிய முடிவுகளின் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண் டும். ஒன்று, குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு வாரத்தில் கரோனா நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதிற்கு மேல், இணை நோய் கொண்டவர்களுக்கும் 70% வரை தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும். கோவிட்-பொருத்தமான நடத்தை மற்றும் கவனிப்புக்கான சமூக உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வருட இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி இருப்போம் என்று நம்புகி றோம் என்றார் அவர்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image